• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்ஜிங்கில் நடைபெற்ற கல்வியின் நான்கு கலைச் செல்வப் பொருட்காட்சி
  2014-06-13 10:41:01  cri எழுத்தின் அளவு:  A A A   

தாள் காட்சி அரங்குகளில், அன்குவெய், சி்சசுவான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பாரம்பரிய கலைத் தாள் காட்சி அரங்குகள், பெரும்பாலானவை. இருப்பினும் வட கொரியாவைச் சேர்ந்த Gao Li Zhi என்ற கொரிய கரும்பு தாள் காட்சி அரங்கு, அதிக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜியாங் ச்சீ ச்சிங் என்னும் இந்த Gao Li Zhi தொழில் நிறுவனம், வட கொரியாவில் தொழிற்சாலையை நிறுவிய சீனத் தொழில் நிறுவனமாகும். இத்தொழில் நிறுவனத்தின் பொறுப்பாளர் ச்சுங் ச்சியாவ் யூங்கின் அறிமுகத்தின்படி, 2012ஆம் ஆண்டு இத்தொழில் நிறுவனம் கட்டிமுடிக்கப்பட்டது. தற்போது வட கொரிய நாட்டவர்களை முக்கியமாக கொண்ட 200 தொழிலாளர்கள் இதில் பணிபுரிக்கின்றனர். Gao Li Zhi தயாரிப்பில், சீனாவின் புதிய தாள் தயாரிப்புக் கருவியும் தொழில் நுட்பமும், வட கொரியாவின் மூலப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய தொழில் நுட்பத்துடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.

எழுது தூரிகை காட்சி அரங்கின் முகத்துவாரத்தில், Shao Zhi Yan எழுது தூரிகை பணிமனை காட்சி அரங்காகும். ஹாங்சோ நகரைச் சேர்ந்த பாரம்பரிய எழுது தூரிகை தயாரிப்புத் தொழில் நிறுவனம் இதுவாகும். இத்தொழில் நிறுவனத்தின் பொறுப்பாளர் Chen Ming Zhuவின் அறிமுகத்தின்படி, Shao Zhi Yan எழுது தூரிமை பணிமனை, நூற்றுக்கு மேற்பட்ட ஆண்டுகளின் வரலாறுடையது. எழுது தூரிகைகள் வகைகளையும், கல்விக்கு தேவைப்படும் இதர கருவிகளையும் சிறப்பாக தயாரித்து விற்பனை செய்கின்றது. இத்தொழில் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில், ஜப்பானிய கொள்வனவு வணிகர்கள், 50 விழுக்காடு வகிக்கின்றனர்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040