• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லீ இனக் கைவினை துணி தயாரிப்பு திறன் கையேற்றல்
  2014-07-22 11:26:51  cri எழுத்தின் அளவு:  A A A   

குவோ சிங் இடைநிலைப் பள்ளி, ஹெய்நான் மாநிலத்தில் லீ இனத் துணி தயாரிப்புத் தொழில் திறன் வகுப்பை வழங்கும் பள்ளியாகும். 2004ஆம் ஆண்டு, இப்பள்ளி, லீ இனத் துணி பின்னல் பாடத்தை வழங்கத் தொடங்கியது. இது வரை, இப்பள்ளியில் சுமார் 1200 மாணவர்கள் லீ இனத் துணி பின்னல் திறனைக் கற்றுக்கொண்டுள்ளனர்.

இப்பள்ளியில் லீ இனத் துணி பின்னலை சிறப்பாக கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் Chen Danகின் அறிமுகத்தின்படி, தற்போது பல மாணவர்கள் லீ இனத் துணி பின்னலில் பேரார்வம் கொண்டுள்ளனர். லீ இனப் பாணியுடைய துணி பின்னல் வகுப்பில், லீ இன மாணவர்களைத் தவிர, ஹான் இன மாணவர்களும் இருக்கின்றனர். மாணவிகளைத் தவிர, ஆண் மாணவர்களும் இருக்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

லீ இனத் துணி தயாரிப்பு கைவினை திறனைப் பாதுகாத்து, கையேற்றும் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக, "பள்ளியில் லீ இனத் துணி பின்னல் வகுப்பு", இதர பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் திங்கள் முதல், ஹெய்நான் மாநிலத்திலுள்ள 18 இடைநிலை பள்ளிகள் மற்றும் துவக்க நிலைப் பள்ளிகளில் லீ இனப் பாணி வாய்ந்த துணி பின்னல் வகுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஹெய்நான் மாநிலத்திலுள்ள சுமார் ஈராயிரம் மாணவர்கள், இந்த பழமை வாய்ந்த பின்னல் தொழில் திறனைக் கற்றுக்கொள்ளத் துவங்கினர்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040