• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லீ இனக் கைவினை துணி தயாரிப்பு திறன் கையேற்றல்
  2014-07-22 11:26:51  cri எழுத்தின் அளவு:  A A A   

லீ இனத் துணி, ஹெய்நானிலுள்ள லீ இனத்தின் சுழற்சி, சாயம், பின்னல் மற்றும் பூத்தையல் பொருட்களின் ஒட்டுமொத்த பெயர் ஆகும். இது, 3000ஆம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறுடையது. ஆனால், தொழி்ல்மயமாக்க வளர்ச்சிப் போக்கு, உயிரின வாழ்க்கை சூழல் மாற்றம் ஆகியவற்றுடன், லீ இனத் துணியைப் பின்னுவதற்குத் தேவையான மூலப் பொருட்கள் விரைவாக குறைந்து வருகின்றன. கைகளுக்குப் பதிலாக, இயந்திரம், லீ இன துணி பின்னலில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. லீ இன இளைஞர்களில் பெரும்பாலோர் பாரம்பரிய ஆடைகளை அணிவதில்லை. லீ இனத் துணி தயாரிப்புத் திறனில் கற்றுத்தேர்ந்த மக்கள் தொகை குறைந்து வருகின்றது. பல்லாயிரம் ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட லீ இன துணி பின்னல் திறன் அழியும் விளம்பில் சிக்கிக்கொண்டுள்ளது.

புள்ளி விபரங்களின்படி, கடந்த நூற்றாண்டின் 50ஆம் ஆண்டுகளில், லீ இனத்துணி தயாரிப்புத் திறன் வாரிசுகள் எண்ணிக்கை சுமார் 50 ஆயிரமாக இருந்தது. இதற்கு பின் இவ்வெண்ணிக்கை, ஆயிரத்துக்கும் குறைந்துள்ளது. வாரிசுகளில், 70 வயதான முதியோர்கள் அதிகம்.

2006ஆம் ஆண்டு லீ இனத் துணி, சீனாவின் முதலாவது தொகுதி பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில சேர்க்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு, யுனேஸ்கோ அமைப்பால், "அவசரமாக பாதுகாக்கப்பட வேண்டிய பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில்" லீ இனத் துணி சேர்க்கப்பட்டது.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040