• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லீ இனக் கைவினை துணி தயாரிப்பு திறன் கையேற்றல்
  2014-07-22 11:26:51  cri எழுத்தின் அளவு:  A A A   

லீ இனத் துணி தயாரிப்புத் திறனைப் பாதுகாக்கும் பொருட்டு, ஹெய்நான் மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தகுந்த பாதுகாப்பு மற்றும் கையேற்றல் வழிமுறைகளை வகுப்பது, வாரிசு பாதுகாப்பு மற்றும் பயிற்சி அமைப்பு முறையை உருவாக்குவது, லீ இனத் துணி தயாரிப்புத் திறனைக் கற்றுக்கொடுக்கும் மையங்களை நிறுவுவது ஆகியவை இந்நடவடிக்கைகளில் அடங்கும். மூலப் பொருட்கள் மீதான லீ இனத் துணி தயாரிப்பு வாரிசுகளின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், பஞ்சு, சணல், அவுரி நீலம்(indigo) உள்ளிட்ட மூலப் பொருட்கள் பயிரிடப்பட்டுள்ளன.

தவிர, ஹெய்நான் மாநிலத்தின் இடைநிலைப் பள்ளிகள் மற்றும் துவக்க நிலைப் பள்ளிகளின் பாட நூல்களில் லீ இனத் துணி தயாரிப்பு தொடர்பான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஹெய்நான் மாநிலத்தின் பண்பாட்டு மற்றும் விளையாட்டுப் பணியகத்தின் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பிரிவின் தலைவர் Chen Ying பேசுகையில், லீ இன துணி பின்னல் தொழில் திறன் வகுப்பு இம்மாநிலத்தின் இடைநிலைப் பள்ளிகள் மற்றும் துவக்க நிலைப் பள்ளிகளில் வழங்கப்படுவது, உள்ளூர் சிறுபான்மை தேசிய இனக் கல்வியின் அம்சங்களைச் செழிப்பாக்கும் அதே வேளையில், யுனேஸ்கோ அமைப்புக்கும் ஒரு முக்கிய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது என்று தெரிவித்தார்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040