• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லீ இனக் கைவினை துணி தயாரிப்பு திறன் கையேற்றல்
  2014-07-22 11:26:51  cri எழுத்தின் அளவு:  A A A   

முன்னதாக லீ இனத் துணி தயாரிப்பு திறன், குடும்ப முறையில் கையேற்றப்பட்டது. தற்போது கையேற்றல் முறையைப் புதுப்பிக்க வேண்டும். ஒரு புறம், ஹெய்நான் மாநிலத்தின் பள்ளிகளில், லீ இனத் துணி தொடர்பான அறிவைப் பரவல் செய்ய வேண்டும். மறு புறம், சிறப்புத் தொழில் பள்ளிகளில் சிறப்பு கல்வியை வழங்கி, லீ இனத் துணி தயாரிப்பு திறமைசாலிகளைப் பயிற்றுவிக்க வேண்டும் என்பது மாநிலத்தின் சிந்தனையாகும் என்று ஹெய்நான் மாநிலத்தின் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு மையத்தின் பொறுப்பாளர் Deng Jing Hua தெரிவித்தார்.

பல பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக, தற்போது ஹெய்நான் மாநிலம் முழுவதில், 105 லீ இனத் துணி தயாரிப்பு வாரிசுகள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த வாரிசுகளின் முயற்சிகளுடன், லீ இனத் துணி தயாரி்ப்புத் திறனில் தேர்ச்சி பெற்றோரின் எண்ணிக்கை, 2009ஆம் ஆண்டில் இருந்த ஆயிரத்திலிருந்து தற்போது பத்தாயிரம் வரை அதிகரித்துள்ளது.

லீ இனத் துணி தயாரிப்புத் திறன் கல்விப் பரவலை உள்ளூர் அரசு வலுப்படுத்த வேண்டும். ஹெய்நான் மாநிலத்தின் மேலதிக பள்ளிகளில், லீ இனத் துணி தயாரிப்பு பாடங்கள் வழங்கப்பட வேண்டும். மேலதிக மாணவர்கள் லீ இனத் துணி பற்றி அறிந்து கொண்டு, மேலதிக வாரிசுகளைப் பயிற்றுவிக்க வேண்டும் என்று Chen Dan விருப்பம் தெரிவித்தார்.


1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040