"பட்டுப் பாதை:தொடக்கப் பகுதி மற்றும் தியன் ஷான் இடைவழியிலுள்ள நெடுஞ்சாலை தொடரமைப்பு", நாடு கடந்த பண்பாட்டு மரபுச் செல்வமாகும். இப்பண்பாட்டு மரபு் செல்வத்தின் பாதையின் மொத்த நீளம், சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் ஆகும். மைய நகரச் சிதிலங்கள், வணிக வர்த்தக நகரங்கள், போக்குவரத்து சிதிலங்கள், மத சிதிலங்கள், தொடர்புடைய சிதிலங்கள் ஆகிய 5 வகை அடையாள முக்கியத்துவம் வாய்ந்த 33 சிதிலங்கள் இப்பாதையின் நெடுகிலும் இருக்கின்றன. இப்பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பு சுமார் 42 ஆயிரத்து 680 ஹெக்டர் ஆகும். சீனாவில் தொல் பொருட்கள் இடங்கள், பழைய கட்டிடங்கள் உள்ளிட்ட 22 சிதிலங்கள் இருக்கின்றன. இச்சிதிலங்களில் 4 சிதிலங்கள் ஹெனான் மாநிலத்தில் இருக்கின்றன. 7 ஷென் சி மாநிலத்தில் இருக்கின்றன. 5 கான்சு மாநிலத்தில் இருக்கின்றன. 6 சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் இருக்கின்றன. சீனாவில் மரபுச் செல்வப் பகுதியின் மொத்த நிலப்பரப்பு சுமார் 28 ஆயிரத்து 421 ஹெக்டர் ஆகும். கசகஸ்தானில் 8 சிதிலங்களும், கிர்கிஸ்தானில் 3 சிதிலங்களும் இருக்கின்றன.
யுனேஸ்கோ அமைப்பின் கீழுள்ள உலக மரபுச் செல்வ மையத்தின் ஆசிய-பசிபிக் பிரிவின் தலைவர் ரென் சிங் ஃபெங் செய்தியாளரிடம் பேசுகையில், சீனா, கிர்கிஸ்தான், கசகஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் கூட்டாக வழங்கிய விண்ணப்பம் இம்மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்தார். 2000 ஆண்டுகளுக்கு முன் உருவாகிய உலகப் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் பொருளாதார நிலைமையை உலகிற்கு வெளிப்படுத்தும் அதே வேளையில், உலகளவில் பல்வகை நாகரீகங்களுக்கிடை பரிமாற்றத்தை பெரிதும் தூண்டுவது உறுதி. மேலும் முக்கியமானது, பட்டுப் பாதையின் நெடுகிலுள்ள நாடுகளின் அரசுகள், மனித குல மரபுச் செல்வங்களைப் பாதுகாக்கும் ஆற்றலை இது உயர்த்தும். அரசின் தலைமையில் மரபுச் செல்வங்களைப் பாதுகாக்கும் வலுவான ஆற்றல் உருவாகும். பழமை வாய்ந்த பட்டுப் பாதைக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்.