• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவிலுள்ள உலக நிலை மரபுச் செல்வப் பாதுகாப்புப் பணியில் பெற்றுள்ள சாதனைகளை
  2014-09-10 16:38:40  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் உலக நிலை மரபுச் செல்வங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது, மிகவும் முக்கியமானது. கடந்த பல்லாண்டுகளில், இம்மரபுச் செல்வங்கள் மீதான பாதுகாப்புக்கும் பயன்பாட்டுக்குமிடை சமநிலையை சீன அரசு ஆராய்ந்து வருகிறது. தற்போது இம்மரபுச் செல்வங்களைப் பாதுகாக்கும் பல்வகை முறைகளை சீனா கண்டறிந்து, உலக மரபுச் செல்வப் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மரபுச் செல்வ பாதுகாப்புக்கு மாதிரி அளித்துள்ளது.

அன்குவெய் மாநிலத்தின் குவாங் ஷா மலை, உலக இயற்கை மரபுச் செல்வப் பட்டியல், உலகப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியல் ஆகிய இரு பட்டியல்களில் சேர்க்கப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த பயணிகள், குவாங் ஷான் மலையின் அற்புதமான இயற்கை காட்சிகளைக் கண்டு ரசிக்க அங்கே வருகை தந்தனர். இது குவாங் ஷான் மலை மரபுச் செல்வப் பாதுகாப்பு மீது பெரும் அழுத்தம் ஏற்படுத்தியுள்ளது.

2013ஆம் ஆண்டு குவாங் ஷான் மலைப் பிரதேசத்தின் மொத்த சுற்றுலா வருமானம், 3000 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. மாபெரும் லாபத்தை எதிர்நோக்கி, உலக மரபுச் செல்வ பொது ஒப்பந்தத்தின் விதிகளைக் கடைப்பிடிப்பது எளிதாக இல்லை. உயிரின பல்வகைத் தன்மைக்கு முக்கியத்துவம் அளித்து, இதைப் பாதுகாப்பது, பண்பாட்டுப் பல்வகைத் தன்மைக்கு மதிப்பளிப்பது, பயணிகளின் மனநிறைவு அதிகரிப்பு மற்றும் கல்வி, குடியிருப்பு மக்களின் இன்ப உணர்வு அதிகரிப்பு ஆகியவை குவாங் ஷான் மலை மரபுச் செல்வப் பாதுகாப்புப் பணியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று குவாங் ஷாங் மலை இயற்கைக்காட்சி மண்டலத்தின் நிர்வாகக்குழுவின் செயல் தலைவர் குவாங் லீன் மு தெரிவித்தார்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040