• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவிலுள்ள உலக நிலை மரபுச் செல்வப் பாதுகாப்புப் பணியில் பெற்றுள்ள சாதனைகளை
  2014-09-10 16:38:40  cri எழுத்தின் அளவு:  A A A   

2008ஆம் ஆண்டு, ஃபூ சியன் மாநிலத்தின் து லோவ் என்னும் பாரம்பரியக் குடியிருப்பு, உலகப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. து லோவ் என்பது, உலகளவில் ஒரெயொரு மலை கிராமக் குடியிருப்பு கட்டிடமாகும். நீண்டகால வரலாறு, தனிச்சிறப்பு மிக்க பாணி, பெருமளவு, அழகிய கட்டமைப்பு ஆகியவற்றால், து லோவ் குடியிருப்புக் கட்டுமானக் கலையில் புகழ் பெற்றுள்ளது.

து லோவ் குடியிருப்புகள், ஃபூ சியன் மாநிலத்தின் நன் சிங் மாவட்டம் மற்றும் யூங் திங் மாவட்டத்தில் முக்கியமாக காணப்படுகின்றன. சில நூறு ஆண்டுகள் நீடித்த வாழும் பண்பாட்டு மரபுச் செல்வமாக, து லோவ் உள்ளூர் பொது மக்களி்ன் அன்றாட வாழ்க்கையுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது.

அதிகப்படியான பயணிகள் து லோவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். து லோவின் தனிச்சிறப்பு மிக்க அழகான தோற்றத்தை பாதுகாத்து, து லோவ் குடியிருப்பில் தங்கியிருக்கும் பொது மக்களுக்கு மேலதிக சுற்றுலா வருமானத்தை கொண்டு வரும் வகையில், ஃபூ சியன் மாநில அரசு, து லோவ் வாழும் மரபுச் செல்வப் பாதுகாப்பு மாதிரியை கண்டறிந்துள்ளது.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040