• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவிலுள்ள உலக நிலை மரபுச் செல்வப் பாதுகாப்புப் பணியில் பெற்றுள்ள சாதனைகளை
  2014-09-10 16:38:40  cri எழுத்தின் அளவு:  A A A   

2014ஆம் ஆண்டு மார்ச் திங்கள், அன்குவெய் மாநிலத்தின் மக்கள் பேரவை திருத்தப்பட்ட குவாங் ஷான் இயற்கைக் காட்சி மண்டல நிர்வாக வழிமுறையை ஏற்றுக்கொண்டது. சீனாவின் முதலாவது இயற்கை காட்சி மண்டல நிர்வாக விதிமுறை இதுவாகும்.

இது வரை, குவாங் ஷான் இயற்கை காட்சி மண்டலத்தில், திட்டப்பணி நிர்வாகம் மற்றும் தணிக்கை ஒழுங்கு உருவாக்கப்பட்டுள்ளன.

கடந்த பல ஆண்டுகளில், தொடர்புடைய விதிகளுக்கிணங்க, குவாங் ஷான் மலை இயற்கை காட்சி மண்டலத்தில், அகற்றப்பட்ட பல்வகை கட்டிடங்களின் மொத்த நிலப்பரப்பு, 40 ஆயிரம் சதுர மீட்டரை எட்டியுள்ளது. பயணிகள் மலையில் பயணம் மேற்கொண்டு, மலையடிவாரத்தில் தங்கியிருப்பதற்கு ஊக்கமளிக்கப்பட்டுள்ளனர். குவாங் ஷாங் மலை இயற்கைக் காட்சி மண்டலத்தில் அன்றாட வாழ்க்கை கழிவுப் பொருட்கள் மற்றும் கழி்வு நீர் வெளியேற்றம் பயன்தரும் முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

யுனேஸ்கோ அமைப்பின் உலக மரபுச் செல்வ மையத்தின் தலைவர் ஜிசோல் ராயோ இவ்வாண்டு ஜூன் திங்கள் குவாங் ஷான் மலையில் சோதனை பயணம் மேற்கொண்டார். உலக மரபுச் செல்வப் பாதுகாப்பு மற்றும் தொடரவல்ல வளர்ச்சி துறையில் குவாங் ஷான் மலை இயற்கை காட்சி மண்டலத்தின் நிர்வாக சாதனைகள், உலக மரபுச்செல்வ பாதுகாப்புக்கு மாதிரி வழங்கியுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040