• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவிலுள்ள உலக நிலை மரபுச் செல்வப் பாதுகாப்புப் பணியில் பெற்றுள்ள சாதனைகளை
  2014-09-10 16:38:40  cri எழுத்தின் அளவு:  A A A   

து லோவ் மரபுச் செல்வப் பாதுகாப்பு மற்றும் நிர்வாகப் பணியை விரைவுபடுத்தும் வகையில், ஃபூ சியன் து லோவ் பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு நிர்வாக வழிமுறை முதலிய பாதுகாப்பு விதிகளை ஃபூ சியன் மாநிலம் அடுத்தடுத்து வெளியிட்டது. து லோவ் பண்பாட்டு மரபுச் செல்வம் மீதான பயன்மிக்க பாதுகாப்பு மற்றும் நியாயமான பயன்பாட்டை இவ்விதிகள் உத்தரவாதம் செய்துளளன.

ஃபூ சியன் மாநிலத்தின் யூங் திங் மாவட்டம் வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி, இம்மாவட்டத்துக்கு வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை, 2007ஆம் ஆண்டில் இருந்த 9 லட்சத்து 70 ஆயிரத்திலிருந்து, 2013ஆம் ஆண்டில் இருந்த 43 லட்சத்து 30 ஆயிரத்துக்கு அதிகரித்துள்ளது. இம்மாவட்டத்தின் மொத்த சுற்றுலா வருமானம், 52 கோடி யுவானிலிருந்து 318 கோடி யுவான் வரை அதிகரித்துள்ளது.

நான் ஜிங் மாவட்டத்தின் து லோவ் நிர்வாகப் பணியகத்தின் துணை தலைவர் யாங் ச்சீ பெங் செய்தியாளரிடம் பேசுகையில், உயிரின வாழ்க்கைச் சூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில், து லோவ் குடியிருப்பில் தங்கியிருக்கும் பொது மக்களுக்கு மேலதிக சுற்றுலா வருமானம் கிடைக்க உத்தரவாதம் செய்ய வேண்டும். இதனால் அனைவரும் ஒன்றுபட்டு, பழமை வாய்ந்த து லோவ் குடியிருப்பைப் பாதுகாக்கப் பாடுபடுவர் என்று தெரிவித்தார்.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040