Sunday    may 11th   2025   
• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்சிங்கில் சிறுபான்மை தேசிய இன கைவினைஞர்கள்
  2014-09-28 15:39:43  cri எழுத்தின் அளவு:  A A A   

ஹா யீ ச்சி என்பவர், "பட்டம் ஹா"யின் நான்காவது தலைமுறையினர். செய்தியாளரிடம், தமது குடும்பத்தினர்கள் பட்டம் உருவாக்கும் வரலாறு பற்றி கூறியதாவது:

"எங்கள் குடும்பத்தினர்கள், 160 ஆண்டுகளுக்கு முன்பே பட்டம் தயாரிக்கத் துவங்கினோம். அவர்கள், அதிதுவக்கத்திலேயே ஹெ பெய் மாநிலத்தின் இடத்தைச் சேர்ந்தவர்கள். குவெய் இனத்தைச் சேர்ந்தவர்கள். அப்புறம் குவெய் இனம் வாழும் பிரதேசமாகும். எனது பாட்டனார், "ஹா குடும்ப பட்டம்" வளர்ச்சிக்கு அடிப்படையிட்டுள்ளார். அவர் முதலாவது தலைமுறையினர். இரண்டாவது தலைமுறையினரான எனது பாட்டனார் அதிகாரப்பூர்வமாக கடை நடத்தி, பட்டம் விற்பதை பிழைப்பு தொழிலாக நடத்தத் துவங்கினார்" என்றார் அவர்.

கடந்த நூற்றாண்டின் துவக்கத்திலேயே, ஹா குடும்பத்தின் பட்டங்கள் உலகில் பெரிதும் வரவேற்பைப் பெற்றன. 1915ஆம் ஆண்டு வண்ணத்துப்பூச்சி, தட்டாம்பூச்சி, Phoenix பறவை, கொக்கு ஆகிய வடிவங்களிலான நான்கு பட்டங்கள் பனாமாவில் நடைபெற்ற உலக பொருள் காட்சியில் காண்பிக்கப்பட்டன. செம்மையான சீனப் பாரம்பரிய கைவினை கலையினால் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்று வெள்ளி பதக்கம் வென்றது. நான்காவது தலைமுறையினரான ஹா யீ ச்சி பத்து வயதிலிருந்தே தந்தையாரிடம் பட்டம் தயாரிக்கும் கலையைக் கற்றுக்கொள்ளத் துவங்கினார். பாரம்பரிய கலை நுட்பத்தை, உலகில் முன்னேறிய தயாரிப்பு கலை நுட்பத்துடன் ஒன்றிணைத்து வளர்ப்பதினால், ஹா குடும்ப பட்டம் தயாரிப்பில் புதிய வளர்ச்சி காணப்பட்டது.

<< 1 2 3 4 >>
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040