• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்சிங்கில் சிறுபான்மை தேசிய இன கைவினைஞர்கள்
  2014-09-28 15:39:43  cri எழுத்தின் அளவு:  A A A   

பட்டம் என்ற கைவினைப்பொருள் தவிர, பெய்ஜிங்கில், கண்டுகளிப்பதற்கு நாட்டுப்புற கைவினைப்பொருட்கள் பல உண்டு. கண்ணாடி திராட்சை என்பது பெய்சிங்கில் தனித்தன்மை வாய்ந்த ஒரு பாரம்பரிய கைவினைப் பொருளாகும். கண்ணாடியை தீயில் உருக்கி, பின்னர், ஒரு குழாய் மூலம் ஊதி இத்திரவம் திராட்சைப் பழ வடிவமாகி, சாயந்தோய்ந்து அவற்றை சங்கிலித் தொடராக இணைத்து துண்டுகளையும் இலைகளையும் பக்கமாக வைத்து, இறுதியில் ஒருவகை வெள்ளைப் பொருளை போட்ட பின், ஊதா நிறம் பச்சை நிறம் உள்ள திராட்சை வடிவ கைவினைப்பொருள் தயாராகின்றன.

"ச்சாங்" எனும் மங்கோலிய குடும்ப கைவினைஞர்கள், இத்தகைய கண்ணாடி திராட்சை தயாரிக்கின்றனர். திராட்சை "ச்சாங்" என்று மக்கள் அழைக்கின்றனர். நூறு ஆண்டுகளுக்கு முன் சிங் வம்சக்காலத்து பேராசரின் தாயான Ci Xi, ச்சாங் குடும்பம் தயாரித்த கண்ணாடி திராட்சை பார்த்த பின், பாராட்டி, பதாகை ஒன்றில் வசனம் எழுதி தந்தார். பின்னர், "திராட்சை ச்சாங்", புகழ்பெற்று வளரத் துவங்கினார்.

அதன் 5வது தலைமுறையினரான ச்சாங் ஹொங் அம்மையார் பேசுகையில், பல தலைமுறையினர்கள் கையேற்று, வளர்த்த தமது குடும்பத்தின் இக்கைவினை கலை, தரமாகியிருப்பதாகக் கூறினார்.

"எங்கள் குடும்பம், மங்கோலியாவைச் சேர்ந்தது. சிங் வம்ச காலத்தின் இறுதியில் பேராசர், மங்கோலிய அரசகுமாரி ஒருவளை மணம் செய்ய, எங்கள் தலைமுறையினர்கள் அவளுடன் சேர்ந்து பெய்சிங் வந்தோம். எங்கள் குடும்பம் தயாரித்த திராட்சை, மிகவும் மெல்லியது. எப்படிப்பட்ட நிறங்கள் இருந்தாலும், ஒளியில் பார்க்கும் போது, திராட்சைப்பழம் போன்றே தெரியும். உண்மையான திராட்சைப் பழம் போலிருக்கின்றது" என்றார்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040