• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தனிச்சிறப்பு வாய்ந்த உய்கூர் இனக் கைவினை கலை
  2014-10-20 16:26:46  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவில், உய்கூர் இனம், ஆடல் பாடலில் தேர்ச்சி பெற்ற இனம் என பொதுவாக கருதப்படுகிறது. உய்கூர் இன மக்கள் ஆடல் ஆடி பாடல் பாடும் போதெல்லாம், வண்ணமிகு ஆடையையும் தொப்பியையும் அணிவது வழக்கம். உய்கூர் இன தொப்பி தயாரிப்பு கைவினை கலை தனிச்சிறப்பு மிக்கது.

32 வயதான மெஹ்முடி மெமெடி ஒரு வணிகர் ஆவார். அவர் சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஹாமி நகரின் அகாஹன் சிறப்பு தொழில் வளர்ச்சி கூட்டு நிறுவனத்தின் பொது மேலாளராக இருக்கின்றார். இக்கூட்டு நிறுவனம், உய்கூர் இன ஆடை தயாரிப்பு மற்றும் விற்பனை அலுவல் நடத்துகிறது. நாள்தோறும் இந்நிறுவனம் அதிக முன்பதிவு படிவங்களைப் பெறுகின்றது. இந்நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் சின்ச்சியாங் முழுவதிலும், குறிப்பாக தென் சின்ச்சியாங்கில் நன்றாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஹாமி நகரின் Hui Cheng வட்டத்தின் ஒரு கிராமத்தில், இக்கூட்டு நிறுவனத்தின் காட்சி மண்டபத்தில், வண்ணமயமான தொப்பிகளும் அழகான உடைகளும் காணப்படுகின்றன. உய்கூர் இன மக்களின் அழகு உணர்ச்சி இதர தேசிய இன மக்களுக்கு அதிர்ச்சி தருகிறது.

இந்த உற்பத்தி பொருட்கள் இயந்திரம் மூலம் தயாரிக்கப்படுகின்றன என்று மெஹ்முடி மெமெடி நகைச்சுவையுடன் தெரிவித்தார். மெஹ்முடியின் வழிகாட்டலுடன், ஒரு திராட்சை தோட்டத்தைக் கடந்து, சிறு காட்சி மண்டபத்துக்குச் சென்றோம். இக்காட்சி மண்டபத்தில், கைகளால் பூத்தையல் செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட உடைகளும், தொப்பிகளும் காணப்படுகின்றன. இந்த வண்ணமிகு ஆடைப் பொருட்கள், ஒரு சிறிய ரக உய்கூர் இன ஆடை அருங்காட்சியகத்தை உருவாக்கியதை போல் இருக்கின்றது.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040