• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தனிச்சிறப்பு வாய்ந்த உய்கூர் இனக் கைவினை கலை
  2014-10-20 16:26:46  cri எழுத்தின் அளவு:  A A A   

பெரிய அல்லது சிறிய தொப்பிகளில், மலர்ந்த பியோனி மலர் மற்றும் Flos Albiziae மலரின் பூத்தையல் உருவங்கள் காணப்படுகின்றன. பண்டைக்காலத்தில், சியு பிரதேசத்தில், பியோனி மலரும், Flos Albiziae மலரும் இல்லை. ஹாமி மன்னர் தலைநகருக்குச் சென்று மன்னரிடம் வணக்கம் சொல்லும் போது, பூத்தையல் கைவினை கலையில் தேர்ச்சி பெற்ற ஒரு தொகுதி மங்கையர்களை ஹாமிக்கு கொண்டு வந்தார். இந்த மங்கையர்தான், பியோனி மலர் மற்றும் Flos Albiziae மலர் உருவத்தை, உள்ளூர் மக்களின் ஆடைகளில் பூவேலை செய்தனர்.

பண்டைக்காலம் தொட்டு, ஹாமி சியு பண்பாடும், சீன மத்திய பகுதி பண்பாடும் ஒன்றிணைந்த இடமாகும். அங்கே சீன மத்திய பகுதி பண்பாடுகள் மற்றும் பாரம்பரிய சிறுபான்மை தேசிய இன நடையுடை பாவனைகளின் நறுமணம் வீசுகின்றன. பல்வகை பண்பாடுகள் அங்கே இணக்கமாக நிலவுகின்றன என்று ஹாமி பிரதேச சுற்றுலா அலுவலகத்தின் தலைவர் சாவ் ஹெய் யன் தெரிவித்தார்.

ஹாமி நகர், சின்ச்சியாங்கின் கிழக்கு வாயில் என அழைக்கப்படுகிறது. இது, பட்டுப் பாதையிலுள்ள முத்து எனவும் போற்றப்படுகிறது. தற்போது ஹாமி நகரில், டாங் மற்றும் ஹான் வம்சக்காலப் பாணியை இன்னமும் உணர்ந்து கொள்ளலாம். பட்டுப் பாதை பொருளாதார மண்டல உருவாக்கத் திட்டப்பணியினால், ஹாமி நகரவாசிகள் புதிய கனவைக் கொண்டிருக்கின்றனர்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040