• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் யு கு இனப் பண்பாட்டைக் கையேற்றல்
  2014-11-28 16:51:44  cri எழுத்தின் அளவு:  A A A   

யு கு இனம், சீனாவின் 56 தேசிய இனங்களில் ஒன்றாகும். இவ்வினத்தின் மக்கள் தொகை சுமார் 13 ஆயிரமாகும். மிகவும் குறைவு. இவ்வினத்தவர்கள் கான்சு மாநிலத்தின் சு நன் மாவட்டத்திலும், சியு ச்சுவன் நகரிலும் முக்கியமாக வாழ்கின்றனர். யு கு இனத்துக்கு நீண்டக்கால வரலாறும், ஒளிவீசும் நாடோடி பண்பாடும் உண்டு. இது வரை யு கு இன மொழி இன்னும் பேசப்படுகிறது. ஆனால் வரலாற்றுப் போக்கில், இம்மொழியின் எழுத்துக்கள் இழந்து விட்டன. யு கு இனப் பண்பாடு, வாய் மூலம் கையேற்றப்பட்டு வருகிறது. காலத்தின் வளர்ச்சி, உற்பத்தி மற்றும் வாழ்க்கை முறையின் மாற்றம் ஆகியவற்றுடன், யு கு இன மொழி அழியும் விளம்பில் சிக்கிக் கொண்டுள்ளது. 2010ஆம் ஆண்டு சீனத் தேசிய இன விவகாரக் குழு, யு கு இன மொழியை, "அழியும் விளிம்பில் இருக்கின்ற 9 சிறுபான்மை தேசிய இன மொழிகளில் ஒன்று"என உறுதிப்படுத்தியது. பழமை வாய்ந்த யு கு இன மொழி அழியாமல் தவிர்க்கும் பொருட்டு, சீனாவின் பல்வேறு நிலை அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, பழமை வாய்ந்த யு கு இன செவிவழி கதைகளைக் கண்டறிந்து தொகுப்பது, சர்வதேச ஒலியியல் எழுத்துக்களைக் கொண்டு, யு கு இன சொல்களுக்கு உச்சரிப்புகளைக் குறிப்பது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவது என்ற முறையில், யு கு இன மொழியைக் கையேற்றுவது, ஒரு முக்கிய நடவடிக்கையாக மாறியுள்ளது.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040