• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் யு கு இனப் பண்பாட்டைக் கையேற்றல்
  2014-11-28 16:51:44  cri எழுத்தின் அளவு:  A A A   

11 வயதான யு கு இன சிறுமி Zhang Xin Yu யு கு இன நாட்டுப்புறப் பாடல் படிப்பு வகுப்பில் பங்கெடுத்தது, இதுவே மூன்றாவது முறை. சாதாரண நாட்களில், அவர் யு கு இன மொழியின் எளிதான சொல்களில், தாயுடன் உரையாடுகிறார். அவரது தாயின் பணிகள் அதிகம். யு கு இன மொழியில் மேலதிக சொல்களை தாய்க்கு அவரிடம் கற்றுக்கொடுக்க நேரமில்லை. இதனால் அவர் இவ்வகுப்பில் பங்கெடுக்கிறார். இவ்வகுப்பில் அவர் அதிக புதிய சொற்களைக் கற்றுக்கொண்டு, சக மாணவர்களிடமிருந்து யு கு இன நாட்டுப்புறப் பாடல்கள் பலவற்றைக் கற்றுக்கொண்டுள்ளார்.

ஓய்வு நேர வகுப்புகளை விட, இந்நாட்டுப்புறப் பாடல் படிப்பு வகுப்பை மேலும் நேசிப்பதாக Zhang Xin Yu தெரிவித்தார். அவருக்கு நோய் வாய்ப்பட்ட போதும், இவ்வகுப்பில் இன்னும் கலந்து கொள்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது:

"இங்கே யு கு இனப் பண்பாட்டைக் கையேற்றி, யு கு இன மொழி அழியாமல் தவிர்க்க முடியும்" என்றார் அவர்.

ஓர் எளிய காரணமாக, யு கு இனத்தவர்கள் யு கு இன மொழி மற்றும் பண்பாட்டைக் கையேற்றும் முக்கிய கடமையை ஏற்கின்றனர். பல்வேறு நிலை அரசுகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் ஆதரவுடன், பழமை வாய்ந்த யு கு இன நாட்டுப்புறப் பாடல்களை, அழகான சு நன் புல்வெளியில் பரவல் செய்ய அவர்கள் வேறுபட்ட வழிமுறையில் தன்னால் இயன்றதனைத்தையும் செய்துள்ளனர்.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040