• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் யு கு இனப் பண்பாட்டைக் கையேற்றல்
  2014-11-28 16:51:44  cri எழுத்தின் அளவு:  A A A   

72 வயதான து சியு லன் அம்மையார், சிறு வயதிலிருந்தே தனது அக்கா து சியு யீங்குடன் தந்தையிடமிருந்து யு கு இன நாட்டுப்புறப்பாடல்களைப் பாட கற்றுக்கொண்டார். அவர்களது தந்தை நாட்டுப்புற பாடகர் ஆவார். தந்தை வாழ்க்கையில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவதுண்டு. தந்தையின் செல்வாக்குடன், து சியு லன்னும், து சியு யீங்கும் உள்ளூர் பிரதேசத்தில் புகழ் பெற்று, நாட்டுப்புற பாடகிகளாக மாறியுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன், இவ்விரு முதியவர்கள் சீனத் தேசிய நிலை பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வ வாரிசுகள் என தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேசிய நிலை பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வ வாரிசுகளாக, இவ்விரு முதியவர்கள் அதிக பணிகளை செய்ய வேண்டும் என்று சு நன் மாவட்டத்தின் பண்பாட்டு மற்றும் ஒலிபரப்பு அலுவலகத்தின் தலைவர் ச்சுங் லீ அம்மையார் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"அவர்கள் மாணவர்களுக்கு நாட்டுப்புறப் பாடல்களைப் பாடக் கற்றுக்கொடுக்க வேண்டும். பல்வகை பொருட்காட்சிகள் மற்றும் அரங்கேற்ற நடவடிக்கைகளில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுக்க வேண்டும். பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வட்டங்களில் நடைபெறும் நாட்டுப்புற பழக்க வழக்க நடவடிக்கைகளில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து, நாட்டுப்புறப் பாடல்களைக் கையேற்ற வேண்டும்" என்றார் அவர்.

தற்போது, இவ்விரு முதியவர்களுக்கு தலா இரண்டு மாணவர்கள் உண்டு. நேரம் இருக்கும் போது, அவர்கள் மாணவர்களுக்கு யு கு இன நாட்டுப்புறப் பாடல்களைப் பாடக் கற்றுக்கொடுக்கின்றனர். தவிர, அவர்கள் நாட்டுப்புற பாடல் வகுப்பில் குழந்தைகளுக்கு நாட்டுப்புறப் பாடல்களைக் கற்றுக்கொடுகின்றனர்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040