• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஃபு ஜியன் மாநிலத்தில் இசை நாடகங்கள் மீதான பாதுகாப்புப் பணிகள்
  2015-01-07 16:14:39  cri எழுத்தின் அளவு:  A A A   

செப்டம்பர் 16 முதல் 22ஆம் நாள் வரை, ஃபு ஜியன் மாநிலத்தின் தலைசிறந்த இசை நாடகங்கள் பெய்ஜிங்கிலுள்ள தேசிய அரங்கேற்றக் கலை மையம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி கல்லூரி, மெய் லன் ஃபெங் அரங்கு ஆகியவற்றில் அரங்கேற்றப்பட்டன. ஃபு ஜியன் மாநிலத்தின் அடையாளமான முக்கியத்துவம் வாய்ந்த 5 வகை இசை நாடகங்களும், "ஐ.நா பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில்" சேர்க்கப்பட்டுள்ள ச்சுவன் சோ பொம்மை நாடகமும் அரங்கேற்றப்பட்டன.

ஃபு ஜியன் மாநிலத்தின் பண்பாட்டுப் பணியகத்தின் தலைவர் Chen Qiu Pingகிங்கின் அறிமுகத்தின்படி, உள்ளூர் இசை நாடகம், ஃபு ஜியன் பண்பாட்டின் அரிய செல்வமாகும். தற்போது ஃபு ஜியன் மாநிலத்தில் 23 வகை இசை நாடகங்கள் உள்ளன. அவை, வரலாற்றின் வேறுபட்ட காலக் கட்டத்தில் உருவாகின. அவை, சீன இசை நாடக வரலாற்றில் சிற்றுருவ மாதிரியாக மாறியுள்ளன. பு ஜியன், லீ யுவன் உள்ளிட்ட பழமை வாய்ந்த இசை நாடகங்கள், இது வரை சுங் மற்றும் யுவன் வம்சக்காலத்தில் நான்ச்சியின் தனிச்சிறப்புக்களை நிலைநிறுத்துகின்றன. அவை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிஞர்களால் "நான் ச்சியின் உயிரும் தொல்லுயிர் எச்சம்" என அழைக்கப்படுகின்றன. தற்காலத்தில், ஃபு ஜியன் உள்ளூர் இசை நாடகங்கள், பாரம்பரியத்தைக் கையேற்றும் அடிப்படையில், வளர்ச்சியும் செழுமையும் அடைந்து வருகின்றன.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040