• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஃபு ஜியன் மாநிலத்தில் இசை நாடகங்கள் மீதான பாதுகாப்புப் பணிகள்
  2015-01-07 16:14:39  cri எழுத்தின் அளவு:  A A A   

பாரம்பரிய இசை நாடகப் பண்பாட்டு்ச் சூழல் மீதான பாதுகாப்புப் பணியில் சீன கமியூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஃபு ஜியன் மாநிலத்தின் பல்வேறு நிலை குழுக்களும் அரசுகளும் முக்கிய பங்காற்றியுள்ளன. கடந்த சில ஆண்டுகளில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஃபு ஜியன் மாநில குழுவும் அரசுகளும் இசை நாடகங்களின் உயிர்வு வாழ்வு மற்றும் வளர்ச்சியில் பெரும் கவனம் செலுத்தி, இசை நாடகக் குழுக்களின் அரங்கேற்றத்துக்கு நிதியுதவி வழங்கியுள்ளன. தவிர, ஃபு ஜியன் மாநிலத்தின் பல்வேறு இடங்களில், கலை நிகழ்ச்சிகளின் அரங்கேற்றத்துக்கு நிதியுதவி வழங்கும் கொள்கை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், உள்ளூர் இசை நாடகங்கள் புத்துயிர் பெற்று வலுப்பட்டுள்ளன என்று Chen Qiu Ping தெரிவித்தார்.

அதே வேளையில், உள்ளூர் இசை நாடகங்களை இயற்றி, அரங்கேற்றும் தலைசிறந்த பண்பாட்டுச் சூழலை ஃபு ஜியன் மாநிலம் பெரிதும் உருவாக்கியுள்ளது. சோஷலிச சந்தை பொருளாதாரத்தின் கட்டுக்கோப்புக்குள், பாரம்பரிய இசை நாடகங்கள், சந்தைமயமாகும் பிரச்சினையை எதிர்நோக்குகின்றன. அழியும் அபாயத்தில் இருக்கின்ற சில இசை நாடகங்களை நிலையான முறையில் பாதுகாக்க வேண்டும். தவிர, அதிக இசை நாடகங்களை விசையியக்க முறையில் கையேற்றி பாதுகாக்க வேண்டும். அரங்கேற்றத்தில், இசை நாடகக் கலை, பார்வையாளர்களின் ஆர்வம், சந்தை பயன் ஆகியவற்றை ஒருங்கிணைந்து, இசை நாடகங்களின் பாரம்பரியத் தனிச்சிறப்பையும், நவீனமான தனிச்சிறப்பையும் இணைக்க ஃபு ஜியன் மாநிலம் பாடுபட்டு வருகிறது. இதில் சிறந்த பயன்கள் பெறப்பட்டுள்ளன.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040