• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஃபு ஜியன் மாநிலத்தில் இசை நாடகங்கள் மீதான பாதுகாப்புப் பணிகள்
  2015-01-07 16:14:39  cri எழுத்தின் அளவு:  A A A   

உள்ளூர் இசை நாடக வகைகள் மீதான பன்முகப் பாதுகாப்பு மற்றும் ஆக்கப்பணியை வலுப்படுத்துவது, உள்ளூர் இசை நாடகங்களின் பாதுகாப்பு, கையேற்றல் மற்றும் வளர்ச்சிக்குத் திறவுக் கோலாகும். உள்ளூர் இசை நாடகங்கள் தோன்றி வளர்ந்து வரும் பண்பாட்டுச் சூழல் மீதான பாதுகாப்பில் ஃபு ஜியன் மாநிலம் முக்கியத்துவம் அளிக்கிறது. இப்பண்பாட்டுச் சூழல் மொழி, நாட்டுப்புறப் பழக்க வழக்க நடவடிக்கைகள், பண்பான நடத்தை, விழாக் கொண்டாட்டம், நாட்டுப்புற நம்பிக்கை ஆகிய துறைகளுடன் தொடர்புடையது. ஃபு ஜியன் மாநிலத்தில், 6 பேச்சு வழக்கு பகுதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு பேச்சு வழக்குப் பகுதியில், இதற்குரிய தனிச்சிறப்பு மிக்க இசை நாடகம் உண்டு. சீன மான்ட்ரீன் மொழியின் பரவல், பேச்சு வழக்கு இழப்பு ஆகியவற்றுடன், உள்ளூர் இசை நாடகங்களின் மொழியும், இசையும் அழியும் அபாயத்தில் சிக்கிக் கொண்டுள்ளன. இதனால், நாட்டுப்புறப் பழக்க வழக்கம் மற்றும் நடையுடை பாவனங்கள், மொழி, பண்பான நடத்தை, விழாக் கொண்டாட்டம், நாட்டுப்புற நம்பிக்கை உள்ளிட்ட வட்டாரப் பண்பாட்டுத் தனிச்சிறப்புகளைப் பாதுகாத்து, பொது மக்களின் வாழ்க்கை மற்றும் பண்பாட்டு மனநிலையின் பல்வகைத் தன்மையை நிலைநிறுத்த வேண்டும். இதன் மூலம், உள்ளூர் இசை நாடகங்களின் உயிர் மற்றும் வளர்ச்சிக்கு தொடரவல்ல வளர்ச்சியடையும் சிறந்த பண்பாட்டு அடிப்படை கிடைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், ஃபு ஜியன் மாநிலம், பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வம் மீதான பாதுகாப்பை வலுப்படுத்தி, மின் நான் பண்பாடு, ஹாக்கா (Hakka)மக்கள் பண்பாடு, சே இனப் பண்பாடு, மா ச்சு பண்பாடு, மின் து பண்பாடு உள்ளிட்ட பண்பாட்டுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்தின் ஆக்கப்பணியை பெரிதும் முன்னேற்றியுள்ளது.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040