• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஃபு ஜியன் மாநிலத்தில் இசை நாடகங்கள் மீதான பாதுகாப்புப் பணிகள்
  2015-01-07 16:14:39  cri எழுத்தின் அளவு:  A A A   

உள்ளூர் இசை நாடகங்களின் வரலாற்றுத் தகவல்கள் மீதான காப்பாற்றுதல், பாதுகாப்பு, ஆய்வு மற்றும் பயன்பாட்டில் ஃபு ஜியன் மாநிலம் கவனம் செலுத்தி, உள்ளூர் இசை நாடகங்களின் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது. Chen Qiu Pingகின் அறிமுகத்தின்படி, கடந்த நூற்றாண்டின் நடுப் பகுதி முதல், நாடகப் பிரதிகள், வரலாறு, அரங்கேற்றம், இசை, அரங்க நுண்கலை உட்பட இசை நாடகங்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு, பாதுகாக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், நவீன அறிவியல் தொழில் நுட்ப வழிமுறையில், ஃபு ஜியன் இசை நாடக ஒலி மற்றும் ஒளி தரவுக் கிடங்கை நிறுவப்பட்டுள்ளது. நீண்டக்கால வரலாறுடைய ஃபு ஜியன் பாரம்பரிய இசை நாடகப் பண்பாட்டு வளம் மற்றும் மரபுச் செல்வத்தைப் பாதுகாத்து, இசை நாடகங்களின் தனிச்சிறப்பை வலுப்படுத்தியதால்தான், ஃபு ஜியன் இசை நாடகக் கலை, பாரம்பரியத்தின் அடிப்படையில், புத்துயிர் பெற்றுள்ளது. நாடகப் பிரதிகளை இயற்றுவதை எடுத்துக்காட்டாக, சீனாவில் செல்வாக்கு வாய்ந்த ஃபு ஜியன் மாநிலத்தின் தலைசிறந்த இசை பிரதிகள், பெரும்பாலும் பாரம்பரிய இசை நாடகங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுளளன.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040