• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குவாங் மெய் இசை நாடகம்
  2015-01-13 15:58:21  cri எழுத்தின் அளவு:  A A A   

சிங் வம்சத்தின் இடைக்காலத்துக்கு பின், குவாங் மெய் மாவட்டத்தில் இயற்கை சீற்றம் ஏற்பட்டது. உள்ளூர் பொது மக்கள் வெளியூருக்குச் சென்றனர். அன்குவெய், ஹுபெய், ஜியான் சி ஆகிய மூன்று பிரதேசங்கள் இணையும் இடத்தில் அன் சிங் அமைகின்றது. இம்மூன்று பிரதேசங்களின் பொது மக்கள் தேயிலை பறிக்கும் இசை நாடகத்தைப் பாடத் தெரிந்து கொண்டனர். இதனால் குவாங் மெய் இசை நாடகம் தோன்றிய இடம் பற்றி சர்ச்சை ஏற்பட்டது. இது வரை இது பற்றி உறுதியான முடிவு இல்லை என்ற போதிலும், குவாங் மெய் இசை நாடகம், அன் சிங்வில் வளர்ந்து, செழிப்பாகி வந்துள்ளது என்பது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள உண்மைதான்.

அன் சிங்வில் குவாங் மெய் இசை நாடக அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. இந்த அருங்காட்சியகம் மூலம், குவாங் மெய் இசை நாடகம் மீதான இந்நகராட்சி அரசின் கவனமும் பாதுகாப்பும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வருங்காட்சியகத்தில், பழைய படம் காட்டும் கருவியால் ஒளிபரப்பாகும் தேவப்பெண் திருமணம் என்ற புகழ் பெற்ற குவாங் மெய் இசை நாடகத்தைக் கண்டு களிக்கலாம். முந்தைய காலத்தில் குவாங் மெய் இசை நாடக அரங்கேற்ற ஆடைகளைப் பார்க்கலாம். சீனாவின் முதலாவது தொகுதி தேசிய நிலை பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதன் மூலம், குவாங் மெய் இசை நாடகத்தின் வளர்ச்சி போக்கினை அறிந்து கொள்ளலாம்.

சிங் வம்சத்தின் இடைக்காலம், குவெய் இசை நாடகக் குழுக்கள் பீக்கிங் மாநகருக்குச் சென்று நிகழ்ச்சிகளை அரங்கேற்றின. சீனாவின் பல்வேறு இடங்களின் அரங்கேறேறச் சந்தை மந்தமாக இருந்தது. இசை நாடக அரங்கேற்றத்துக்கு பொது மக்களின் தேவையின் அதிகரிப்பு காரணமாக, வென் ஹே ஆற்றுப்பள்ளத்தாக்கின் மிக பல விவசாயிகளும், கைவினை தொழிலாளர்களும் அரங்கிற்கு வந்து, உள்ளூர் பேச்சு வழக்கு மூலம் உள்ளூர் பழக்க வழக்கங்களையும் கதைகளையும் விவரித்து, மக்களுக்கு மகிழ்ச்சி தந்தனர். குவாங் மெய் இசை நாடகத்தின் அடிப்படை வடிவம் உருவாகியது. 18வது மற்றும் 19வது நூற்றாண்டில், பொது மக்களிடையே குவாங் மெய் இசை நாடகம் படிப்படியாக வளர்ந்து வந்தது. நாட்டுப்புற இசை நாடகக் குழுக்கள் கிராமத்திலிருந்து, வட்டத்துக்குச் சென்றன. அன் சிங்கிலிருந்து வெளிப்புற மாநிலங்களுக்குச் சென்றன.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040