• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குவாங் மெய் இசை நாடகம்
  2015-01-13 15:58:21  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின், அன் சிங்கின் குவாங் மெய் இசை நாடகம் தொடர்ந்து வளர்ந்தது. குவாங் மெய் இசை நாடகம், நாட்டின் புகழ் பெற்ற இசை நாடக வகைகளில் ஒன்றாக மாறியுள்ளது.

சீன மக்களிடையே இந்த இசை நாடகத்தின் செல்வாக்கு அதிகரித்து வந்தது.

1978ஆம் ஆண்டுக்கு பின், குவாங் மெய் இசை நாடகம் மேலும் வளர்ந்து வந்துள்ளது. சீனாவின் பல இடங்களில் தொழில் முறை இசை நாடகக் குழுக்கள் நிறுவப்பட்டன. குவாங் மெய் இசை நாடகம், சர்வதேச செல்வாக்கு வாய்ந்த தலைசிறந்த இசை நாடகமாக படிப்படியாக மாறியுள்ளது.

தனது குவாங் மெய் இசை நாடக லட்சியத்தில், ஹான் ச்செய் ஃபெங் அம்மையார், பல புகழ் பெற்ற இசை நாடகங்களில் கதா பாத்திரமாக ஏற்று நடித்தார். "பேரரசனின் பெண் மாப்பிள்ளை", "Yang Yu Huan", "தென் கிழக்கை நோக்கி பறக்கின்ற மயில்", "குவெய் சோ மகளிர்" மற்றும் "குவெய் சோவில் சென்றகால நிகழ்ச்சிகள்" தலைப்பிலான இசை நாடகங்களில், அவர் தனது கதா பாத்திரத்தை அரங்கேற்றினார். அவர் கூறியதாவது:

"அரங்கு இசை நாடகம், தொலைக்காட்சி நாடகம், திரைப்படம், சிறு கதை நாடகம் ஆகியவற்றில் நூற்றுக்கு அதிகமான கதா பாத்திரங்களாக ஏற்றி நடித்துள்ளேன். நடிகர் என்ற பணி, எனக்கு இன்ப உணர்வு தந்துள்ளது. நான் நடித்த ஒவ்வொரு கதா பாத்திரத்தையும் மிகவும் விரும்புகின்றேன்" என்றார் அவர்.

எதிர்காலத்தில், குவாங் மெய் இசை நாடகம் செழுமையாக வளர்ச்சியடையும் என்றும், இந்த இசை நாடகம் மீது முழு நம்பிக்கை கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040