• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
யுன்னான் மாநிலத்தில் சிறுபான்மை தேசிய இனப் பண்பாடு மீதான பாதுகாப்பு
  2015-01-21 16:35:45  cri எழுத்தின் அளவு:  A A A   

யுன்னான் மாநிலம், சீனாவின் தென் மேற்கு எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. அங்கு 25 சிறுபான்மைத் தேசிய இனங்கள் வாழ்கின்றன. இதனால், உலகில் தனிச்சிறப்பு மிக்க சிறுபான்மை தேசிய இனப் பண்பாட்டை இம்மாநிலம் கொண்டுள்ளது. நீண்டகாலமாக, இப்பண்பாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் யுன்னான் மாநிலம் பெரும் கவனம் செலுத்தி வருகின்றது. இத்துறையில், ஆக்கப்பூர்வ பயன் பெறப்பட்டுள்ளது.

சீனாவில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள, "யுன்னான் பற்றிய மனப்பதிவு" என்ற பெரிய ரக சிறுபான்மை தேசிய இன ஆடல் பாடல் அரங்கேற்றம் நடைபெற்றது. யுன்னான் மாநிலத்தின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு மையத்தின் துணைத் தலைவர் Ni Jin Kui பேசுகையில், இந்த பெரிய ரக ஆடல் பாடல் அரங்கேற்றத்தில் வெளிப்படுத்தப்படும் சிறுபான்மைத் தேசிய இனக் கலை, தேசிய இனப் பண்பாட்டு கனியை யுன்னான் மாநிலம் பாதுகாப்பதை முக்கியமாக பிரதிபலிக்கின்றது என்றார். சிறுபான்மை தேசிய இனப் பண்பாட்டைப் பாதுகாப்பதோடு, இப்பண்பாட்டுத் தொழிலை யுன்னான் மாநிலம் ஆக்கப்பூர்வமாக வளர்க்கின்றது. "யுன்னான் பற்றிய மனப்பதிவு" போன்ற சிறுபான்மை தேசிய இன ஆடல் பாடலை அரங்கேற்றி, தேசிய இனப் பண்பாடு மீதான பாதுகாப்பை, உள்ளூர் பொருளாதார வளர்ச்சியுடன் இணைத்து, பொருளாதாரத்தை வளர்க்கும் வேளையில், சிறுபான்மை தேசிய இனப் பண்பாடு மீதான பாதுகாப்பை விரைவுபடுத்துவது ஒரு நல்ல வடிவமாகும் என்றும் Ni Jin Kui தெரிவித்தார்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040