• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
யுன்னான் மாநிலத்தில் சிறுபான்மை தேசிய இனப் பண்பாடு மீதான பாதுகாப்பு
  2015-01-21 16:35:45  cri எழுத்தின் அளவு:  A A A   

லீ ஜியாங் என்னும் பழமை வாய்ந்த நகர், சுமார் 800 ஆண்டுகால வரலாறு உடையது. 1997ஆம் ஆண்டு உலகப் பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பெயர்ப் பட்டியலில் இந்நகர் சேர்க்கப்பட்ட பின், இந்நகர் மீதான பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்துக்கென, பல்வேறு நிலை அரசுகளும், பல்வேறு சமூகத் துறைகளும் சுமார் 50 கோடி யுவான் ஒதுக்கீடு செய்துள்ளன. இதில், சுமார் 30 கோடி யுவான், இந்நகரின் பராமரிப்புக்கு நேரடியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நிதித்தொகையினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பயன், லீ ஜியாங் நகரின் சுற்றுலா தொழிலின் வளர்ச்சியை முன்னேற்றுவதாகும். கடந்த பத்து ஆண்டுகளாக, சுற்றுலா பண்பாட்டுத் தொழிலின் தூண்டுதலுடன், லீ ஜியாங் நகரின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில், குறிப்பிடத்தக்க பயன் பெறப்பட்டுள்ளது. லீ ஜியாங் நகர பாதுகாப்பு நிர்வாக அலுவலகத் தலைவர் He Shi Yong பேசுகையில், சிறுபான்மை தேசிய இனப் பண்பாட்டுப் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்குமிடை உறவை செவ்வனே கையாள்வது, லீ ஜியாங் நகர் விரைவாக வளர்வதற்குத் திறவுகோலாகும் என்றார். அவர் கூறியதாவது:

"பாதுகாப்பை, முதலிடத்தில் வைக்கும் கோட்பாட்டை எப்போதும் கடைப்பிடிக்கின்றோம். இதற்குப் பின், வளர்ச்சி மற்றும் நியாயமான பயன்பாடு. வளர்ச்சிப் போக்கில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பயன் தான், மரபுச் செல்வப் பாதுகாப்பு லட்சியத்துக்கு உதவி அளிக்கிறது. ஒன்று, மற்றதன் குறைவை நன்றாக நிரப்பியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, லீ ஜியாங் நகரில், மரபுச் செல்வப் பாதுகாப்பும், சுற்றுலாத் தொழிலும் ஒருங்கிணைப்பாக வளர்ந்து வருகின்றன என்று ஐ.நா நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். இனிமேல், பாதுகாப்புப் போக்கில், மரபுச் செல்வப் பாதுகாப்பு தொடர்பான விதிகள் மற்றும் சட்டங்களின் படி, ஒழுங்கான நிர்வாகம் மேற்கொள்வதைத் தவிர, அறிவியல் ஆய்விலும், சேவை மேம்பாட்டிலும் பாடுபட வேண்டும்" என்றார், அவர்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040