தற்போது, சிறுபான்மை தேசிய இனப் பண்பாட்டுத் தொழிலை வளர்க்கும் பொருட்டு, பண்பாட்டுத் தொழில் குழுக்கள், வெவ்வேறான பிரதேசங்களிலும், வெவ்வேறான தொழில்களிலும் அலுவல் செய்வதை ஊக்குவித்து, அதிக அரசு சாரா மூலதனம், பண்பாட்டுத் துறையில் நுழைவதை யுன்னான் மாநிலம் ஈர்த்துள்ளது. 2003ஆம் ஆண்டு முதல், யுன்னான் பற்றிய மனப்பதிவு கூட்டு நிறுவனம், Bai Lian He Shun சுற்றுலா பண்பாட்டு வளர்ச்சி கூட்டு நிறுவனம், Feng Chi Media முதலிய பல அரசு சாரா பண்பாட்டுத் தொழில் நிறுவனங்கள், யுன்னானின் பண்பாட்டு அரங்கில், முக்கிய பங்காற்றியுள்ளன.
யுன்னான் மாநிலத்தில் உள்ள, He Shun என்னும் பழமை வாய்ந்த நகர், "சீனாவில் ஈர்ப்பு ஆற்றல்மிக்க நகரமாக அழைக்கப்படுகின்றது. இம்மாநிலத்தின் அரசு சாரா பண்பாட்டுத் தொழில் நிறுவனமான யுன்னான் Bai Lian He Shun சுற்றுலாப் பண்பாட்டு வளர்ச்சி கூட்டு நிறுவனத்தின் முதலீட்டுடன் இது வளர்க்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் பொது மேலாளர் Wang Da San பேசுகையில், He Shun நகரின் பண்பாடு பாதுகாக்கப்பட்டு, கையேற்றப்பட்டு, வளர்க்கப்படுவது, He Shun நகருக்கு மட்டும் நன்மை பயக்கவில்லை என்றார். அவர் கூறியதாவது:
"கடந்த 4 ஆண்டுகளாக, அரசு Bai Lian He Shun கூட்டு நிறுவனத்தை உட்புகுத்தியுள்ளது. இங்குள்ள வேலை வாய்ப்பும், வரி வசூலிப்புத் தொகையும் அதிகரித்துள்ளன. He Shun நகருக்கு "சீனாவில் ஈர்ப்பு ஆற்றமிக்க நகர்" என்ற பெயர் சூட்டப்பட்டப் பின், இந்நகரின் சுற்றுலா பண்பாட்டுத் தொழில் வளர்ச்சியடைந்ததுடன், இந்நகரவாசிகளின் வருமானம் தெளிவாக அதிகரித்துள்ளது" என்றுஅவர் தெரிவித்தார்.