• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
யுன்னான் மாநிலத்தில் சிறுபான்மை தேசிய இனப் பண்பாடு மீதான பாதுகாப்பு
  2015-01-21 16:35:45  cri எழுத்தின் அளவு:  A A A   

"வளர்ச்சி அடையும் போக்கில், சிறுபான்மை தேசிய இனப் பண்பாட்டை பாதுகாக்கின்றோம். இது, சமூக முன்னேற்றத்துக்கு ஏற்றது. சிறுபான்மை தேசிய இனப் பண்பாட்டை மேலும் செவ்வனே பிரச்சாரம் செய்து, வளர்ப்பது, பாதுகாப்பின் நோக்கமாகும்" என்று அவர் தெரிவித்தார்.

சிறுபான்மை தேசிய இன வரலாற்றுப் பண்பாட்டு வளத்தைத் தோண்டி, தேசிய இனப் பண்பாட்டைக் கையேற்றி, பாதுகாத்து, வளர்க்கும் பொருட்டு, பல கொள்கைகளை யுன்னான் மாநில அரசு வெளியிட்டுள்ளது என்று Ni Jin Kui கூறினார். எடுத்துக்காட்டாக, 2000ஆம் ஆண்டின் மே திங்களில், "யுன்னான் மாநிலத்து சிறுபான்மை தேசிய இன மற்றும் நாட்டுப்புறப் பாரம்பரியப் பண்பாடு மீதான பாதுகாப்பு விதிகள்" வெளியிடப்பட்டு, நடைமுறைக்கு வந்தன. சீனச் சிறுபான்மை தேசிய இன மற்றும் நாட்டுப்புறப் பாரம்பரியப் பண்பாட்டுப் பாதுகாப்பு தொடர்பான முதலாவது பிரதேச சட்டவிதி இதுவாகும். யுன்னான் மாநிலத்தின் சிறுபான்மை தேசிய இன பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி, சட்ட அமைப்பு முறைமயமாக்கப் பாதையில் செல்வதை இது கோடிட்டுக்காட்டுகிறது. தவிர, சிறுபான்மை தேசிய இன மற்றும் நாட்டுப்புறப் பண்பாட்டு பாதுகாப்பு பற்றிய கள ஆய்வுப் பணியை யுன்னான் மாநிலம் மேற்கொண்டுள்ளது. மாநிலம் முழுவதிலும், பல்வேறு சிறுபான்மை தேசிய இனங்களின் பழைமை வாய்ந்த ஆவணங்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. பழைமை வாய்ந்த நூல்கள், 10 ஆயிரத்துக்கு அதிகமான வகைகளில் இருக்கின்றன. இந்த அடிப்படையில், சிறுபான்மை தேசிய இன மற்றும் நாட்டுப்புற உயர் நிலை நுண் கலை ஆசிரியர், சிறுபான்மை தேசிய இன மற்றும் நாட்டுப்புற நுண் கலை ஆசிரியர் மற்றும் நுண் கலை கலைஞர் என்ற பெயர்கள் 660 பேருக்கு அடுத்தடுத்து சூட்டப்பட்டுள்ளன. 80க்கு அதிகமான சிறுபான்மை தேசிய இனப் பண்பாட்டு சூழல் பாதுகாப்பு கிராமங்களும் மண்டலங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளின் மூலம், யுன்னான் மாநிலத்தின் சிறுபான்மை தேசிய இனப் பண்பாட்டுப் பாதுகாப்புப் பணி, அதிக பயன் பெற்றுள்ளது.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040