• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
யாவ் இனத் துணி கைவினைக் கலை கையேற்றல்
  2015-02-03 16:48:58  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் யாவ் இனப் பின்னல் மற்றும் பூத்தையல் கலை, யாவ் இன மகளிர் தலைமுறை தலைமுறையாக கையேற்றி வரும் பாரம்பரியக் கலையாகும். பாரம்பரியப் பண்பாட்டு ரீதியில், பின்னல் மற்றும் பூத்தையல் கலை, யாவ் இன மகளிரின் கைத் திறனை மதிப்பிடும் வரையறையாகும். யாவ் இன துணி, கைக் குட்டை, இடுப்புப் பட்டை, ஆடை ஆகியவற்றில் வண்ணமயமான உருவங்கள் பூத்தையல் செய்யப்படுகின்றன. இந்த உருவங்களின் கருப்பொருட்கள், யாவ் இன மக்களின் அன்றாட வாழ்க்கையில் நன்கு தெரிந்த விலங்கு மற்றும் தாவர வகைகளுடன் தொடர்புடையவை. தவிர, பூச்சிகள், யாவ் இனத்தவர், நட்சத்திர ஓமம், லீக் பூக்கள் முதலியவை, இந்த உருவங்களின் கருப் பொருட்களாகும்.

நாள்தோறும் காலை எட்டு மணி முதல், இரவு எட்டு மணி வரை, சீனாவின் குவாங் சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஜின் சியு யாவ் இனத் தன்னாட்சிப் மாவட்ட நகரில் யோ பெங் குவாங் என்னும் யாவ் இனக் கைவினைப் பொருட்கள் கடையில், வாடிக்கையாளர்கள் சுறுசுறுப்பாக வந்து செல்கின்றனர். இதற்கிடையில், அவர்கள் பல்வகைப் துணிப் பொருட்களை தெரிவு செய்து, வாங்குகின்றனர். இத்துணிப் பொருட்களில், யாவ் இன ஆடைகள், யாவ் இனப் பைகள், சிவப்பு நிறத் தலைப்பாகைகள் ஆகியவை காணப்படுகின்றன. துணிப் பொருட்களில் பறவை வகைகள், பறக்கும் டிராகன் முதலிய உருவங்கள் மிக தத்ரூபமாக இருக்கின்றன.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040