• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கூடைப்பந்து வீர்ர் யாவ் மிங்
  2015-02-04 15:41:57  cri எழுத்தின் அளவு:  A A A   

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டி, சாம்பியன் பட்டப் போட்டி முதலிய உலக விளையாட்டுப் போட்டிகளில் சீன விளையாட்டு வீர்ர்கள் பலர் சிறந்த சாதனையை ஈட்டிதந்துள்ளனர். அவர்களுள் உலகளவில் லீனாவைத் தவிர யாவ் மிங்கும் புகழ்பெற்ற விளையாட்டு வீர்ராவார்.

யாவ் மிங்கின் உயரம் 226 சென்டி மீட்டர். எடை 140.6 கிலோகிராம். இவர் 1980ஆம் ஆண்டு ஷாங்காய் மாநகரில் பிறந்தார். அவரது தந்தை ஷாங்காய் கூடைப் பந்து அணிக்காகவும் தாய் சீனத் தேசிய மகளிர் கூடைப் பந்து அணிக்காகவும் விளையாடியவர்களாவர். இந்தக் குடும்பத்தின் செல்வாக்குடன் வளர்ந்த அவர் குழந்தை பருவத்திலேயே கூடைப் பந்து விளையாட்டில் தேர்ச்சி பெறத் துவங்கினார். ஷாங்காய் இளைஞர் கூடைப் பந்து அணி, சீன இளைஞர் கூடைப் பந்து அணி, சீன கூடைப் பந்து அணி ஆகியவற்றில் அவர் முறையே சேர்ந்துள்ளார்.

2000ஆம் ஆண்டு பிப்ரவரி அவர் ஆசிய நட்சதிர கூடைப் பந்து அணியில் விளையாடுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் பிரபலமான என்பிஏ டிராஃபுடில் வென்று 2002ஆம் ஆண்டு அவர் அமெரிக்க ஹியுஸ்டன் ராக்கெட் அணியில் சேர்ந்தார்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040