• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கூடைப்பந்து வீர்ர் யாவ் மிங்
  2015-02-04 15:41:57  cri எழுத்தின் அளவு:  A A A   

• 2008ஆம் ஆண்டு மே 12ஆம் நாள் சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் மாவட்டத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதற்குப் பின் சில நாட்களுக்குள் யாவ் மிங் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வென் சுவான் மக்களுக்கு மொத்தம் 20 இலட்சம் யுவான் நன்கொடை வழங்கினார். ஜுன் திங்கள் 11ஆம் நாள் சிச்சுவான் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் 20 இலட்சம் அமெரிக்க டாலர் நன்கொடையை வழங்குவதாக அவர் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ஜுன் திங்கள் 26ஆம் நாள் யாவ் நிதியம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.

• ஷாங்காய் உலக பொருட்காட்சி மற்றும் உலகச் சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டு யாவ் மிங் சுறுசுறுப்பாக செயலாற்றினார்.

• விளையாட்டுத் துறையிலும் சர்வதேசச் சமூகத்தில் நலன் கருதி எய்ட்ஸ் நோய் தடுப்பிலும் யாவ் மிங் ஆற்றிய பங்கினைப் பாராட்டும் வகையில், ஹாங்காங் பல்கலைக்கழகம் 2012ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் நாள் அவருக்கு சமூக அறிவியலுக்கான மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

• 2013ஆம் ஆண்டு, பிரிட்டனின் இளவரசர் வில்லியம், கால்பந்து வீர்ர் டைவிட் பெக்ஹாம் ஆகியோருடன் இணைந்து யாவ் மிங், வன விலங்கு பாதுகாப்பு பற்றிய ஒரு பரப்புரை திரைப்படத்தில் பங்கேற்றார்.

• என்பிஏ சீனா என்ற அமைப்புடன் ஒத்துழைத்து என்பிஏ யாவ் மிங் பள்ளி என்ற பள்ளியை அதே ஆண்டு டிசம்பர் முதல் நாள் தொடங்கினார்.

• அக்டோபர் 22ஆம் நாள் வாஷிங்டனிலுள்ள சீனத் தூதரகத்தில் அமெரிக்காவின் வின்டோ நிதியம் இவ்வாண்டுக்கான பங்களிப்பு பரிசு வழங்கியது. அமெரிக்க வின்டோ நிதியம் உலகில் மிகப் பெரிய தன்னார்வுத் தொண்டு அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டுக்கான பரிசு மொத்தம் 4 பேருக்கு வழங்கப்பட்டது. யாவ் மிங் அவர்களில் ஒருவராவார்.

• கூடைப் பந்து விளையாட்டால் யாவ் மிங் புகழ்பெற்றார். ஆனால், கூடைப் பந்து தன்னுடைய வாழ்க்கையில் ஒரு பகுதி மட்டும் தான் என்று அவர் கூறினார். மேலதிக இலக்குகளை முயற்சியுடன் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். அறக்கொடையில் ஈடுபட்ட அவர் இந்த சிறந்த பழக்கத்தை மேலதிக மக்களிடையில் பரப்பி வருகின்றார் என்று பரிசளிப்பு விழாவில் புகழ்பெற்ற தொலைகாட்சி நிகழ்ச்சி அறிவிப்பாளர் ச்சி யூ சி கூறினார்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040