• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மத்திய சிறுபான்மை தேசிய இன பல்கலைக்கழகத்தின் ஆடல் குழு
  2015-02-17 15:44:57  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன மத்திய சிறுபான்மை தேசிய இன பல்கலைக்கழகத்தில் இளைஞர்கள் அடங்கிய ஆடல் குழு ஒன்று இருக்கின்றது. இந்த இளைஞர்கள், பல்வேறு சிறுபான்மை தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வெவ்வேறான துறைகளில் கல்வி பயில்கின்ற போதிலும், சிறுபான்மை தேசிய இன ஆடல் மீதான பொது ஆர்வம் காரணமாக, அவர்கள், ஒன்றிணைந்து, உயிர்த்துடிப்புள்ள இந்த ஆடல் குழுவை உருவாக்கினர்.

இந்த ஆடல் குழுவின் உறுப்பினர்களில், 80 விழுக்காட்டுக்கு அதிகமானோர், இப்பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிறுபான்மைத் தேசிய இன மாணவர்கள் ஆவர்.

இந்த ஆடல் குழு, நிறுவப்பட்டு, 18 ஆண்டுகள் ஆகின்றன. பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இளங்கலை மாணவர்களும், முதுகலை மாணவர்களும் இக்குழுவில் இடம்பெறுகின்றனர். ஆடல் குழு உறுப்பினர்களில் உய்கூர், மங்கோலியா, திபெத், யி, தெய், ஹானி, குவெய் உள்ளிட்ட இனத்தவர்கள் அடங்குவர். சாதாரண பல்கலைக்கழக மாணவர்களாகிய அவர்கள், ஆடலை நேசிப்பதால், இக்குழுவில் சேர்ந்தனர்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040