• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மத்திய சிறுபான்மை தேசிய இன பல்கலைக்கழகத்தின் ஆடல் குழு
  2015-02-17 15:44:57  cri எழுத்தின் அளவு:  A A A   

18 ஆண்டுகளுக்கு முன், இப்பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற மெள லெய் என்ற பெயர் கொண்ட யீ இன மாணவர், இந்த ஆடல் குழுவை உருவாக்கினார். அப்போது, கலை நிகழ்ச்சிக்கான பயிற்சி இடம் ஏதும் இல்லை.

தற்போது, இந்த ஆடல் குழுவுக்கு பயிற்சி இடம் கிடைத்துள்ளது. பெய்சிங்கில் உள்ள உயர் கல்வி நிலையங்களின் ஆடல் குழுக்களில் இந்த ஆடல் குழுவின் ஆடல் படைப்புகள் உயர் தரமானவை. யுன்னான், திபெத், ஹாங்காங், மக்கெள முதலிய பிரதேசங்களுக்கு ஆடல் குழு பயணமாகச் சென்று, அரங்கேற்றங்களை நடத்தியுள்ளது. 2007ஆம் ஆண்டு மே திங்களில், ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசம், தாய்நாட்டுக்கு திரும்பிய 10வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், அழைப்பின் பேரில், இந்த ஆடல் குழு, ஹாங்காங்கின் உயர் கல்வி நிலையங்களிலும், இடைநிலைப்பள்ளிகளிலும் ஒரு வாரம் அரங்கேற்றியது. ஹாங்காங்கில் உள்ள பல்வேறு பள்ளிகளில் வண்ணமயமான சீனச் சிறுபான்மைத் தேசிய இன ஆடல்களையும், நவீன ஆடல்களையும், இக்குழு அரங்கேற்றியது. குவான் சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த குவெய் இன மாணவி ச்சின் ஷான் பேசுகையில், சிறுபான்மைத் தேசிய இன நடையுடை பாவனைகளை வெளிப்படுத்தும் படைப்புகள், இந்த ஆடல் குழுவில், மேம்பாட்டுடைய படைப்புகளாகும். "சீனக் குடும்பம்" என்னும் ஆடலை இந்த ஆடல் குழு உறுப்பினர்கள் பல ஆண்டுகளாக அரங்கேற்றி வருகின்றனர். இந்த ஆடலில் சீனாவின் பல்வேறு சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஆடல் கலைகள் செறிந்து பிரதிபலிக்கப்பட்டுள்ளன. இது, ஆடல் குழுவின் பிரதிநிதிப் படைப்புகளில் ஒன்றாகும். இது மட்டுமல்ல, மத்திய சிறுபான்மை தேசிய இன பல்கலைக்கழகத்தில், பல்வேறு தேசிய இன இளைஞர்கள் ஒன்றுபடும் சின்னமாக இந்த ஆடல் மாறியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக, இதில் பங்கேற்று நடனமாடி வரும் ஹானி இன மாணவர் குவாங் மிங் கூறியதாவது:

"'சீனக் குடும்பம்' என்ற ஆடலில், சீனாவின் சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஆடல்கள் காணப்படலாம். பெய்சிங் மாநகரின் பல்கலைக்கழக மாணவர்களின் முதலாவது கலை நிகழ்ச்சி அரங்கேற்றத்தில் இந்த ஆடலை ஆடினோம். எங்கள் செறிவான உணர்வு வெளிப்பாடு பெருமளவில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. கலை நிகழ்ச்சி அரங்கேற்றத்தில் இந்த ஆடலுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது." என்றார் அவர்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040