• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மத்திய சிறுபான்மை தேசிய இன பல்கலைக்கழகத்தின் ஆடல் குழு
  2015-02-17 15:44:57  cri எழுத்தின் அளவு:  A A A   

விடுமுறை நாட்களில், ஆடல் குழு உறுப்பினர்கள், தத்தமது ஊருக்குத் திரும்பிய பின், பல்வேறு சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஆடல்களில் பெரும் கவனம் செலுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக, ஆடல் அசைவுகள், பாணி, சிறுபான்மைத் தேசிய இன ஆடைகள் முதலியவை. பல்கலைக்கழகத்துக்குத் திரும்பிய பின், ஆடல் பயிற்சி செய்யும் போது, இவை, முக்கிய வளங்களாக பயன்படுகின்றன.

ஆடல் குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர், ஆடல் துறையில் கல்வி பயிலவில்லை. ஆடல் குழுவில் சேர்ந்து, சிறப்பு ஆடல் பயிற்சியில் ஈடுபட்டப் பிறகு, பல மாணவர்கள், பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இருந்த போதிலும், கடினமான பயிற்சியினால், வண்ணமயமான சிறுபான்மைத் தேசிய இன ஆடல் படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. Sangji Dongzhi என்னும் திபெத் இன இளைஞர் கூறியதாவது:

"மத்திய சிறுபான்மை தேசிய இனப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற கடந்த சில ஆண்டுகளில், எனக்கு கிடைத்த அனைத்து பெருமையும், வாய்ப்புகளும், திறமைகளும், இக்குழுவிலுள்ள என் சக மாணவர்களுடன் பிரிக்கப்பட முடியாதவை. எனது வாழ்நாளில், இந்த அருமையான நேரத்தை மறக்க போவதில்லை என கருதுகின்றேன்" என்றார், அவர்.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040