சாங் ச்சியா காவ் நகரிலுள்ள 4 பெரிய ரக விளையாட்டு திடல்கள் நடப்பு விண்ணப்பத் திட்டத்தில் சேர்க்கப்பட்டன. வான் லுங் பனி சறுக்கு பள்ளியின் பயிற்சியாளர் ட்சு ஓசியாங் கூறியதாவது
பள்ளி மாணவர்கள் முதல் முதியோர் வரை பனி சறுக்கலில் ஈடுபட முடியும். எனது மாணவர்களில் மிக இளமையானவர் இரண்டரை வயது மட்டும். மிக முதியவருக்கு 68 வயது என்றார் அவர்.
வான்லுங் பனி சறுக்கு பள்ளியில் தற்போது சுமார் 60 பயிற்சியாளர்கள் உள்ளனர். தவிர, சில பனி சறுக்கு ரசிகர்கள் குறிப்பிட்ட சான்று இதழைப் பெற்ற பின் விடுமுறையில் இங்கே வந்து தற்காலிகமாக பயிற்சியாளராகப் பணி புரிகின்றனர். தற்போது ஒரு பனி சறுக்கு பள்ளியில் சுமார் 1000 மாணவர்கள் உள்ளனர் என்று மதிப்பிடப்படுகின்றது.
24வது குளிர்கால ஒலிம்பிக்ப் விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கான சீனாவின் விண்ணப்பம் வெற்றி பெற்றால், இத்தகைய பள்ளிகளில் பயற்சி பெற்ற மாணவர்களும், பயிற்சியாளர்களும் இப்போட்டியில் பணியாளர்களாகவும் தன்னார்வத் தொண்டர்களாகவும் பணி புரியலாம். சாங் ச்சியா காவ் நகரிலுள்ள மி யுவான் யூன் திங் என்னும் ஒரு பனி சறுக்கு பூங்காவின் துணைத் தலைவர் கூறியதாவது
எமது பூங்கா 2009ஆம் ஆண்டு கட்டியமைக்கத் துவங்கியது. பூங்காவின் மொத்த நிலப்பரப்பு ஒரு நூறு சதுர கிலோமீட்டராகும். பூங்காவில் 10 இலட்சம் அறைகள் உள்ளன. நாளுக்கு 30 ஆயிரம் மக்களை வரவேற்க முடியும். தற்போது ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி பயணிகளை வரவேற்கின்றோம் என்று அவர் கூறினார்.