இந்தப் பூங்கா மலேசிய கூட்டு நிறுவனத்தின் முதலீட்டுடன் கட்டியமைக்கப்பட்டது. அதன் சுற்று சூழலின்மீது சுமார் 10 ஆண்டுகால கண்காணிப்புக்குப் பிறகு இக்கூட்டு நிறுவனம் முதலீடு செய்யத் தொடங்கியது. இந்நகரின் காற்று தரமும் இயற்கை சூழ்நிலையும் தலைசிறந்ததாகும் என்று இங்கே சோதனை பணி மேற்கொண்ட குளிர்கால விளையாட்டு நிபுணர்க் குழு தெரிவித்தது.
குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடர்பான ஆயத்தப் பணி மேற்கொள்ளும் அதேவேளையில், இளைஞர்களிடையில் குளிர்கால விளையாட்டுக்களை பரவல் செய்வதிலும் சீனா ஈடுபட்டு வருகிறது.
17வயதான ட்சுய் சாவ் கூறியதாவது
வடக்கு பகுதியில் அடிக்கடி பனி பொழிகிறது. பனி தொடர்பான விளையாட்டில் ஈடுபட்டு மகிழலாம். அதன் மூலம் உடல் நலமாக இருக்கும். மனநிலையும் மேம்படும் என்று அவர் கூறினார்.