• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கறுப்பு நிற ஆடை அணியும் சுவாங் இனம்
  2015-03-11 09:19:36  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் சிறுபான்மைத் தேசிய இனமான சுவாங் இனத்தின் ஒரு கிளையான கறுப்பு நிற ஆடை அணியும் சுவாங் இனத்தைச் சேர்ந்த "நெய் தே யா" குழு பாடுகின்ற பாடல்கள், மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. கடந்த பல ஆண்டுகளில், இக்குழு, சீனாவின் பல்வேறு இடங்களில், இதை அரங்கேற்றியுள்ளது. தனது இனத்தின் நாட்டுப்புறப்பாடல்களை ஆசைத் தீரப்பாடிக் கொண்டே இருக்கின்றது. இக்குழு பெரிதும் வரவேற்கப்படுகிறது.

இக்குழுவின் தலைவர் Huang He Dong, கறுப்பு நிற ஆடை அணியும் சுவாங் இனத்தவர் அல்ல. இருப்பினும், இவ்வினத்தின் இசை மீதான தமது விருப்பத்தால், கடந்த ஐந்தாண்டுகளாக, இக்குழுவுக்குத் தலைமை தாங்கி, சீனாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பலவிதமான அரங்கேற்றங்களில் அவர் பங்கெடுத்தார். சுவாங் இன மொழியில் "நெய் தே யா" என்றால், மிகவும் சிறந்தது எனப் பொருட்படுகின்றது. கறுப்பு நிற ஆடை அணியும் சுவாங் இனத்தின் நாட்டுப்புறப்பாடல் உண்மையிலேயே மிகவும் சிறந்தது, தனித்தன்மை வாய்ந்தது. இப்பாடல்களைக் கேட்ட பின், ஏதோ ஒரு அதிர்ச்சி உணர்வு ஏற்படுகின்றது. நாட்டுப்புறப்பாடல் பற்றி அவர் கூறியதாவது:

"நாட்டுப்புறப்பாடல்கள் 6 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அன்றாட வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் அவை பாடப்படுகின்றன. விருந்தினர்களை வரவேற்கும் போது பாட வேண்டியவை. மதுபானம் வழங்கும் போது பாட வேண்டியவை என்று இப்பாடல்கள் தலைமுறை தலைமுறையாக கையேற்றப்பட்டுள்ளன" என்றார், அவர்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040