நாட்டுப்புறப்பால்களைப் பாடிக் கொண்டே அவர்கள் மதுபானத்தை விருந்தினர்களுக்கு வழங்குகின்றனர். அப்போது விருந்தினர்கள் ஒரே மூச்சில் மதுபானத்தை அருந்தி முடிக்க வேண்டும். இல்லாவிடில், தம்மை இழிவாகப் பார்ப்பதாக அவர்கள் கருதி விடுவார்கள்.
கிராமத்தில் நுழைந்ததும், வரிசை வரிசையான மரத் துண்டு கட்டமைப்புடைய மாடி கட்டிடங்கள் செய்தியாளர்களின் கண்களில் தென்பட்டன.
இக்கட்டிடங்களுக்கு முன்னாலுள்ள வெற்றிடத்தில், சுவாங் இனத்தின் இளம் ஆண்களும் பெண்களும் விருந்தினர்களுக்கென, நாட்டுப்புறப்பாடலைப் பாடி நடனமாடுகின்றனர். மலைப்பிரதேசத்தில் வாழும் இந்த கறுப்பு நிற ஆடை அணியும் சுவாங் இனத்தவர்கள், சிறு வயதிலிருந்தே நாட்டுப்புறப்பாடலை பாடத் துவங்குகின்றனர். காதல், உழைப்பு ஆகியவற்றை இப்பாடல்கள் வெளிப்படுத்தும். பாடல்களின் வரிகள், வளமான அம்சங்களுடையவை. இவ்வாண்டு 19 வயதான இளம் பெண் Li Hai Yan செய்தியாளருக்கென ஒரு நாட்டுப்புறப் பாடலை பாடினார். அவர் கூறியதாவது:
"சாதாரண நாட்களில் மலை ஏறி, உழைத்து உழைத்து களைப்படைந்த போது, நாங்கள் கற்களில் அமர்ந்து ஓய்வு எடுக்கின்றோம். பின்னர், பெரிய மலைகளை நோக்கி நாட்டுப்புறப்பாடல்களைப் பாடுகின்றோம். எங்களின் குரல் இனிமையாவதற்கு, இங்குள்ள பெரிய மலைகளே காரணம்" என்றார்.