• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கறுப்பு நிற ஆடை அணியும் சுவாங் இனம்
  2015-03-11 09:19:36  cri எழுத்தின் அளவு:  A A A   

"நெய் தே யா" குழு, கறுப்பு நிற ஆடை அணியும் சுவாங் இனத்தின் நாட்டுப்புறப்பாடல் பண்பாட்டினை, வெளியூர்களுக்கு கொண்டு சென்றது. 2001ம் ஆண்டில், குவாங் சி நங்னிங் நகரில் நடைபெற்ற சர்வதேச நாட்டுப்புறப்பாடல் விழாவில் இக்குழுவினர் முதன்முறையாக அரங்கேற்றினர். இதனால் அவர்கள் கவனிக்கப்படத் துவங்கினர். இதற்குப் பின், சீனத் தேசிய தொலைக்காட்சி நிலையத்தில் அவர்கள் அரங்கேற்றினர். நாடு முழுவதும் அவர்கள் வரவேற்கப்படுகின்றனர். எப்படிப்பட்ட நிலையில் இவ்வினம் வாழ்ந்துள்ளது? அவர்களின் பாட்டொலி எவ்வளவு அழகானது? மனங்களில் ஊடுருவும் ஆற்றலுடையது? இவற்றை கேட்க, மென்மேலும் அதிகமான வெளியூர்களிலிருந்து பயணிகள் வருகை தருகின்றனர்.

குவாங் சி தன்னாட்சிப் பிரதேசத்தில் வாழும் கறுப்பு நிற ஆடை அணியும் சுவாங் இனத்தவர்கள், முக்கியமாக நா போ மாவட்டத்தில் வாழ்கின்றனர். 2 லட்சத்துக்குட்பட்ட மக்கள் தொகையுடைய இச்சிறிய மாவட்டத்தில் ஏறக்குறைய 60 ஆயிரம் சுவாங் இனத்தவர்கள் வசிக்கின்றனர். பண்டைக் காலம் தொட்டு, அவர்கள் கறுப்பு நிறத்துக்கு மதிப்பு அளித்து அதை அழகு என கருதுகின்றனர். கறுப்பு நிறம், அவர்களின் ஒரு வகை தேசிய இன அடையாளமாக மாறியுள்ளது. ஆயிரம் ஆண்டுகளாக மாறாமல் கையேற்றப்பட்டுள்ளது.

அண்மையில் எமது செய்தியாளர் Long Hua என்னும் கிராமத்தில், அவர்களின் நடையுடை பாவனைகளை நேரில் கண்டு உணர்ந்துள்ளார்.

கறுப்பு நிற ஆடை அணியும் சுவாங் இனத்தவர்கள் உற்சாகமிக்கவர்கள். விருந்தோம்பல் மிகுந்தவர்கள். கிராமத்தின் நுழைவாயிலை நெருங்க நெருங்க, விருந்தினரை வரவேற்பதற்காக மேளமடிக்கப்பட்டுக்கொண்டே, சிலர் கிராமத்தின் நுழைவாயிலில் நின்று, கைகளில் மதுபானத்தை ஏந்திய வண்ணம் விருந்தினரை வரவேற்றனர். அவர்கள் தலை முதல் கால் வரை அணிந்திருந்த அனைத்துமே கறுப்பு நிறமே.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040