• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கறுப்பு நிற ஆடை அணியும் சுவாங் இனம்
  2015-03-11 09:19:36  cri எழுத்தின் அளவு:  A A A   

பெரிய மலைகளில் வாழும் இவ்வினத்தவர்கள், வேளாண் உற்பத்தியில் முக்கியமாக ஈடுபடுகின்றனர். விவசாயம் மட்டுமே என்பதால், அவர்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை நிலை ஒப்பீட்டளவில் தாழ்ந்ததாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில், தமது தனித்தன்மை வாய்ந்த நாட்டுப்புறப்பாடல்கள் மற்றும் தேசிய இன நடையுடை பாவனைகள் மூலம், உள்ளூரில் சுற்றுலா துறை வளரத் துவங்கியது. பல குடும்பங்கள், உறைவிட வசதிகளை மேம்படுத்தியுள்ளன. குறைவற்ற குடும்பங்களில், தொலைபேசி, தொலைக்காட்சி பேட்டி முதலியவை இருக்கின்றன. வெளியூர்களுடன் அவர்கள் தகவல் தொடர்பை வலுப்படுத்தியுள்ளனர். சுற்றுலாத் துறையின் வளர்ச்சி, இவ்வினத்தவர்களின் வறிய வாழ்க்கை நிலையை மேம்படுத்தியுள்ளது. இவ்வாண்டு 45 வயதான சுவாங் இன மூதாட்டி Yang Gui Jin பெரிய மலையை விட்டு வெளியே போகவில்லை. அவர் கூறியதாவது:

"இப்போது சுற்றுலாத்துறை வளர்ச்சியினால், நாள்தோறும் பயணிகள் வருகின்றனர். வாழ்க்கை முன்பை விட பெரிதும் மேம்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்தின் பிள்ளைகளும் பள்ளிகளுக்குப் போக முடியும். முன்பு இப்படி செய்ய முடியாது" என்றார்.

நா போ மாவட்டத்தின் அதிகாரி Li Yong Feng பேசுகையில், "தேசிய இனப் பண்பாட்டு மூலவளத்தை வகைப்படுத்தி, தேசிய இனச் சுற்றுலாத்துறையை வளர்ச்சியுறச்செய்து, இறுதியில், பொருளாதார வளர்ச்சியை தூண்டியுள்ளோம். இதனால் பொது மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டு வளமடைந்துள்ளனர்" என்றார்.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040