• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜியங்சி மாநிலத்தில் பயண அனுபவம்
  2016-12-14 15:39:48  cri எழுத்தின் அளவு:  A A A   

வெளிநாட்டு பத்திகையாளர் குழுவுடன் இணைந்து சீன வானொலி தமிழ்ப் பிரிவின் செய்தியாளர் பண்டரிநாதன், சீனாவின் தென் பகுதியிலுள்ள ஜியங்சி மாநிலத்தின் நான்சாங், புஜௌ, வூயுவான், ஜிங்தெசென் ஆகிய நகரங்களில் பயணம் மேற்கொண்டார். ஜியாங் மாநிலத்தின் சுற்றுலா தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

பொதுவாக, ஜியங்சி மாநிலத்தில் பச்சை மரங்கள், ஆறுகள், ஏரிகள் என இயற்கை வளங்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளன. எனவே, ஜியங்சியில் உயிரின வாழ்க்கைச் சூழல், காற்றின் தரம் நன்றாக உள்ளது. பெய்ஜிங், சான்ஷி, சிச்சுவான், சேஜியங் உள்ளிட்ட மாநிலங்களை விட, ஜியங்சியின் சுற்றுலா தளங்களின் புகழ் கொஞ்சம் குறைவு. இருப்பினும், இங்குள்ள சுற்றுலா வளம், தனிச்சிறப்புமிக்கது.

புதுமையும் பழமையும் நிறைந்திருக்கும் நான்சாங் மாநகரம்

முதலில், பயணத்தின் முதல் இடமான நான்சாங் பற்றி கூறுகின்றேன். நான்சாங், ஜியங்சி மாநிலத் தலைநகர் ஆகும். அது, சீனாவில் தேசிய நிலை பழைய மற்றும் கலாச்சார நகராகும். வரலாற்றில், மேற்கு ஹான் வம்சக் காலத்தில் அமைக்கப்பட்டது முதல் தற்போது வரை இந்நகர் 2,200க்கும் அதிகமான ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது. இன்றைய நான்சாங் மாநகரில் பழமையும் புதுமையும் அதிகமாகக் காணப்படுகின்றன.

முதன்முறையாக இங்கு சுற்றுலா செய்யும் நண்பர்கள், நான்சாங்கிலுள்ள இரவுக் காட்சியைக் கண்டுரசிப்பதை பரிந்துரை செய்கின்றோம். கான்ஜியாங் எனும் பெரிய ஆறும் இந்த நகரின் மத்தியில் ஓடுகின்றது. நல்ல வானிலையின் இரவின் போது, சுற்றுலா படகு மூலம் பயணிகள் சிறந்த இரவுக் காட்சியை பார்க்கும் அதேசமயத்தில், நன்கு வடிவமைக்கப்பட்டுள்ள ஒளி-ஒலி நிகழ்ச்சியையும் கண்டுரசிக்கலாம். அது, மறக்கமுடியாத நிகழ்வாகும்.

பாதாசன்ரென் அருங்காட்சியத்தில்

சீனாவின் பராம்பரிய ஓவியக் கலை, பீங்கான் ஓவியம் ஆகிய பராம்பரிய சீனக் கலாச்சரம் மீது ஆவல் கொண்டுள்ளவர்கள், நான்சாங்கில் உள்ள பாதாசன்ரென் அருங்காட்சியம், பீங்கான் ஓவிய அருங்காட்சியகம் ஆகியற்றுக்கு செல்வார்கள். மிங் வசம்த்தின் இறுதி முதல் சிங் வம்சத்தின் துவக்க காலம் வரை வாழ்ந்த பாதாசன்ரென், சீனாவின் பராம்பரிய ஓவியக் கலை வரலாற்றில் தனிச்சிறப்பு பங்கை ஆற்றியதோடு, அதற்கு பிந்தைய ஓவிய கலையின் வளர்ச்சிக்கு குறிப்பிட்ட அளவில் செல்வாக்கினை ஏற்படுத்தினார்.

பீங்கான் ஓவியம்

ஜியங்சி மாநிலத்தின் ஜிங்தெசென் நகரிலான பீங்கான் பொருட்கள் மிகுந்த புகழைப் பெற்றவை. இருப்பினும், நான்ங்கின் பீங்கான் ஓவிய கலை மிகவும் பெருமையாக போற்றுப்படுகிறது.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040