• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜியங்சி மாநிலத்தில் பயண அனுபவம்
  2016-12-14 15:39:48  cri எழுத்தின் அளவு:  A A A   

புஜோ மாவட்டம்-நாடக நகர்

புஜோ மாவட்டத்தில் நல்ல உயிரின வாழ்க்கைச் சூழ்நிலை, தனிப்பட்ட கலாச்சாரக் காட்சிகள் நிலவுகின்றன. ஓய்வுக்கும் அமைதியான வாழ்க்கைக்கும் உகந்த நல்ல இடமாக இது திகழ்கிறது. புஜோவுக்கு திறமைசாலிகளின் தாயகம் என்ற பெருமை உள்ளது. குறிப்பாக, உலகளவில் நாடகாசிரியராக விளங்கி வந்த டங்சியன்சூவின் தாயகம், புஜோ ஆகும்.

சீனாவின் வரலாற்றில் இடம் வகித்த டங்சியன்சூ, கீழை நாடுகளில் உள்ள வில்லியம் ஷேக்ஸ்பியர் என புகழப்பட்டார். அவரும் வில்லியம் ஷேக்ஸ்பியனும் ஒரே நூற்றாண்டுக் காலத்தைச் சேர்ந்தவர்கள். புஜோ மாவட்டத்தில் டங்சியன்சூவுக்கான சர்வதேச ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. டங்சியன்சூவை கலாச்சாரச் சின்னமாக கொண்டு, சீனாவில் நாடகத்தை எழுதுவது, நாடகத்தைப் பார்ப்பது, நாடகம் நடிப்பது, நாடகக் கருத்து தெரிவிப்பது ஆகியவை ஒன்றாக உள்ளடங்கும் "நாடக நகரம்"ஆக புஜோவை உருவாக்க அரசு முயற்சித்து மேற்கொண்டு வருகிறது.

டங்சியன்சூவின் நாடகங்களின் மீது ஆவர்ம் கொள்ளும் நீங்கள், புஜோ நகரிலுள்ள டங்சியன்சூ அருங்காட்சியத்தைப் பார்ப்பது சிறப்பாக இருக்கும்.

சீனாவின் பழைய கிராமத்தின் பல்வகை விஷ்யங்களை அறிந்து கொள்ள விரும்பினால், புஜோ மாவட்டத்திலுள்ள ஜின்ஷி வட்டத்திலுள்ள ஜுசியாவ் பழைய கிராமம், உங்களு சுற்றுலா செல்லும் நல்ல இடமாகும். இங்கே தென் சீனாவில் பழைய மற்றும் தனிச்சிறப்புமிக்க வீட்டு வடிடிமைப்பு ஆகிய காட்சிகளைத் தவிரவும், பாரம்பரிய கலாச்சாரங்களை நேரில் பார்த்தும் உணரலாம்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040