• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜியங்சி மாநிலத்தில் பயண அனுபவம்
  2016-12-14 15:39:48  cri எழுத்தின் அளவு:  A A A   

பீங்கான் தலைநகர்-ஜிங்தெசென்

பழைய காலத்தில், சீனாவின் சாங்நான், "பீங்கானின் தலைநகர்" என்று கூறப்பட்டது. சாங்நானில் தயாரிக்கப்பட்ட பீங்கான், உள்நாட்டு மற்றும் உலகளவில் புகழ்பெற்றது. எனவே, மேலை நாடுகளில், "சீனா" மற்றும் "சாங்நான்" இரு வார்த்தைகளும் ஒரே பொருளுக்கு சமமாகும். இந்நிலையில், "சீனா", ஒரு நாட்டின் பெயராக மாறியது. அத்துடன், பீங்கான் வகைப் பொருள், "சீனா" எனவும் அழைக்கப்படத் தொடங்கியது. இன்று சாங்நானுக்கு பெயர் மாற்றப்பட்டு ஜிங்தெசென் என அழைக்கப்பட்டு வருகிறது.

டாவ்சிச்சுவான் தளத்தில் இரவுக் காட்சி

இன்றைய ஜிங்தெசென் நகரில், முன்பு போல பீங்கான் பொருட்கள் தொடர்ந்து தயாரிக்கப்பட்டு வருன்றன. அது மட்டுமல்லாமல், சீனாவின் பீங்கான் கலாச்சாரம் மேலதிகமாக வெளிக்காட்டப்படுகிறது. ஜிங்தெசெனின் டாவ்சிச்சுவான் எனும் இடத்தில், பழைய தொழிற்சாலை புதிதாக மறுசீரமைக்கப்பட்டு, முற்றிலும் புதிய பீங்கான் கலாச்சாரத்துக்கான தளம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, பழைய தொழிற்சாலைக் காட்சி, பீங்கான் தயாரிப்பு, பீங்கான் சந்தை, தங்கும் விடுதி, உணவகம், ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு வசதி ஆகியவை ஒன்றாக இணைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தற்போது, டாவ்சிச்சுவான் தளம், ஜிங்தெசெனின் கலாச்சாரச் சின்னமாக மாறியுள்ளது.

பீங்கான் ஓவியம் வரைவதில் செய்தியாளர்கள் பங்கேற்பு

தற்போது, வெளிநாடுகளைச் சேர்ந்த பீங்கான் கலைஞர்களும் ஆர்வலர்களும் டாவ்சிச்சுவான் தளத்தில் தங்கி, சீன கலைஞர்களுடன் பரிமாற்றத்தை மேற்கொண்டு, தங்களது பீங்கான் படைப்புகளை உருவாக்கி வருகின்றனர்.

சீன பீங்கான் அருங்காட்சியகத்தில் கண்காட்சி

இருப்பினும், சீனாவின் பீங்கானின் தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றை விரிவாகவும் ஆழமாகவும் அறிய விரும்பினால், ஜிங்தெசெனிலுள்ள சீன பீங்கான் அருங்காட்சியகத்துக்கு செல்வது உரிய தேர்வாகும்.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040