• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜியங்சி மாநிலத்தில் பயண அனுபவம்
  2016-12-14 15:39:48  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் மிக அழகிய கிராமம்-வூயுவான்

அடுத்து பயண இடம், வூயுவான் ஆகும். வூயுவான் வட்டம், ஜியங்சி மாநிலத்தின் ஷாங்ராவ் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். ஜியங்சி, ஜேஜியாங், ஆன்ஹுய் ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லைப் பகுதியில் வூயுவான் அமைந்துள்ளது. ஆன்ஹுய் மாநிலத்தின் கலாச்சாரம், இங்கு ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு, புத்தகம் நகர் மற்றும் தேயிலை நகர் என்ற பெருமைகள் உள்ளன.

ஹுவங்லிங் கிராமத்தில் சைச்சியு எனும் கலாச்சர நிகழ்ச்சியின் காட்சி 

வூயுவான், சீனாவின் புகழ்பெற்ற கலாச்சராம் மற்றும் சுற்றுசூழல் மிக்க சுற்றுலாப் பயணமாகும் வட்டமாகும். சீனாவின் மிக அழகிய கிராமங்கள் என்ற பெருமையால், பொது மக்கள் அதனை நன்கு அறிந்து வைத்துள்ளனர். இந்த அழகமான கிராமங்களில், வூயுவான் வடக்கிழக்குப் பகுதியிலுள்ள ஹுவங்லிங் கிராமத்துக்கு சுமார் 600 ஆண்டு வயதாகும். சைச்சியு எனும் கலாச்சர நிகழ்ச்சி, இக்கிராமத்தில் தான் தோன்றியது. சரிவான மலைப் பகுதியில் அமைந்துள்ள இக்கிராமத்தில், மிக தனிச்சிறப்பு சுற்றுலா அனுபவங்களை பயணிகள் உணர்வார்கள் என நம்புகின்றோம். ஓராண்டின் நான்கு காலாண்டுகளில் வேறுபட்ட இயற்கைக் காட்சிகள் அங்கு தோன்றும்.

பழைய கிராமத்தில் தரமிக்க தங்கும் வசதி பயணிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு செல்லும் பயணிகளுக்கு மறக்கமுடியாத பயண நினைவை இக்கிராமம் ஏற்படுத்தும்.

சீன வானொலி தமிழ்ப் பிரிவின் இணையதளத்தில், ஹுவங்லிங் கிராமம் தொடர்பான புகைப்படங்கள், காணொளி ஆகியவை வெளியிடப்படுள்ளன. நேயர் நண்பர்களே, எமது இணையதளத்தில் உலா வந்து அதைப் பாருங்கள்...

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040