• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீன வம்சகால வரலாறு]

சீன வரலாற்றில் முதலாவது வம்சகாலம் –சியா(சியா வம்சகாலம்)

சியா வம்சகாலம் சீன வரலாற்றில் முதலாவது வம்சம் என அழைக்கப்படுகின்றது. அதன் ஆட்சிகாலம் கி.மு.21ம் நூற்றாண்டு முதல் கி.மு.16ம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது. 17 மன்னர்கள் அடுத்தடுத்து 500 ஆண்டுகளுக்ரு ஆட்சிபுரிந்தனர். அதன் அதிகார எல்லை தற்போதைய சீனாவின் சான்சி மாநிலத்தின் தெற்கு பகுதியிலிருந்து ஹொநான் மாநிலத்தின் மேற்கு பகுதி வரை விரிவடைந்தது.

சியா வம்சத்தை நிறுவியவரான தா யு மன்னர், நீர்வளத்தை கட்டுபடுத்தி மக்களுக்கு அமைதியான வாழும் சூழ்நிலையை உருவாக்கிய புகழ் பெற்ற வீரராக பாராட்டப்பட்டார். நீண்டகாலமாக வெள்ள பெருக்கு ஏற்பட்ட மஞ்சள் ஆற்றை வெற்றிகரமாக முட்டுப்படுத்திய அவர் பழங்குடி மக்களின் பாராட்டைப் பெற்றார். அவருடைய தலைமையில் சியா வம்சம் தொடங்கியது. பழஞ் சமூகம் தனியார் சொத்துரிமை உடைய சமூகமாக மாறியதை அதன் உருவாக்கம் எடுத்துக்காட்டுகின்றது. அப்போதே அடிமை சமூகம் சீனாவில் நுழைந்து விட்டது.

சியா வம்சத்தின் முடிவில் மன்னர் குடும்பத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. வர்க்க முரண்பாடு கடுமையாகியது. குறிப்பாக கடைசி மன்னர் சியா சியெ பதவி ஏற்ற பின் மேற்குர்த்திருத்தத்தில் கவனம் செலுத்தாமல் ஆடம்பர வாழ்க்கையில் மூழ்கினார். நாள் தோறும் மனதுக்கு பிடித்த வைப்பாட்டிகளுடன் இணைந்து மது குடித்து விளையாடினார். மக்கள் துன்பத்தால் வாடினர். அவரிடம் யோசனை கூறிய அமைச்சர்கள் கொல்லப்பட்டனர். ஆகவே சிற்றரசுகள் அடுத்தடுத்து அவரை துரோகமாக செய்தனர். அவர்களில் ஒருவரான ஸான் என்பவர் இந்த குழப்பத்தை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி கிளர்ச்சியை தூண்டிவிட்டு கடைசியில் சியா சியெயின் படைவீரர்களை தோற்கடித்தார். சியா சியெ தப்பி ஓடிய பின் சியா வம்சகாலம் முடிவடைந்தது.

சியா வம்சகாலம் பற்றிய பதிவேடுகள் மிக குறைவு. தொல் பொருள் ஆய்வு மூலம் அப்போதைய பண்பாட்டு மரபுச் சிதிலங்களை கண்டுபிடிக்க தொல் பொருள் அறிஞர்கள் விரும்புகின்றனர். ஆய்வின் படி சியா வமவ்ச வரலாற்றை மறுஉருவாக்கம் செய்வது அவர்களின் விருப்பங்களில் ஒன்றாகும். 1959ம் ஆண்டு முதல் சீன தொல் பொருள் வட்டாரம் சியா வம்சத்தின் சிதிலத்தை ஆராய்ந்து சியா வம்ச பண்பாட்டு ஆராய்ச்சியை துவக்கியது. இப்போது சீனாவின் ஹொநான் மாநிலத்தின் யென் ஸ் ஏலிதொ மரபுச் சிதிலத்தால் பெயரிடப்பட்ட "ஏலிதொ பண்பாடு"சியா வம்சத்தின் பண்பாட்டை ஆராய்ச்சிக்குரிய முக்கிய அம்சமாக உறுதிப்படுத்தலாம் என்று பெரும்பாலான அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பண்பாட்டுச் சிதிலம் ஆய்வின் படி சுமார் கி.மு. 1900 ஆண்டுகளில் நிருந்தது. இது சியா வம்ச ஆட்சியை சேர்ந்தது. சியா வம்ச பண்பாட்டை உறுதிப்படுத்தும் நேரடி ஆதாரமாக இது இல்லாத போதிலும் கண்டுபிடிக்கப்பட்ட வளமான தொல் பொருட்கள் சியா வம்ச பண்பாட்டை ஆராயும் பணிக்கு பயன் தருவதாக உள்ளன.

ஏலிதொ பண்பாட்டுச் சிதிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள் முக்கியமாக கல் பொருட்களாகும். வீட்டின் அடிப்படை தளம், சாம்பல் குழி, சவபெட்டி புதைக்கப்பட்ட குழி ஆகியவற்றின் சுவரில் மரக் கருவிகளின் சாயல் காணப்பட்டது. அப்போது வாழ்ந்த உழைப்பாளிகள் பயன்படுத்திய கருவிகள் மிகவும் எளிதானவை. இருந்தாலும் அவர்கள் அயராது உழைத்து விவேகத்துடன் நீர்வளத்தைக் கட்டுப்படுத்தி வேளாண் உற்பத்தியை வளர்த்தார்கள். இதுவரை சியா வம்சச் சிதிலத்தில் பெரிய வெண்கல பொருட்கள் எதுவும் கண்டிபிடிக்கப்பட வில்லை. ஆனால் ஏலிதொ பண்பாட்டு மரபுச் செல்வங்களில் வெண்கலத்தால் உருவாக்கப்பட்ட சுத்தி, குத்தூசி, உளி முதலிய கருவிகள் உள்ளன. அவற்றின் சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கண்டுபிடிக்கப்படட் வென்கல வார்ப்பு அச்சு, வெண்கல கழிவு போன்ற பொருட்கள் சிதிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. தவிரவும் ஏராளமான கை வினை தரம் கொண்ட மணிக்கல் பொருட்கள் கல் இசைக் கருவிகள் தொல்பொருட்களில் காணப்பட்டன. அப்போதைய கைவினை தொழில்துறையின் தொழில் நுட்பமும் மேலும் வளர்ச்சியடைந்ததை இந்த தொல் பொருட்கள் எடுத்துக்காட்டின.

பண்டைகால பதிவேட்டில் சியா வம்ச ஆட்சியில் நேரம் கணக்கிடுவது பற்றிய பதிவேடு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாதுகாக்கப்பட்ட "தாத்தை அற நூலில்"உள்ள சியா வம்சத்தின் நேரம் கணக்குதல் மிக முக்கிய பண்பாட்டு பதிவேடாகும். வட நட்சத்திரக் குழு காட்டிய இடத்தின் படி மாதங்களை உறுதிப்படுத்தும் திறமையை அப்போதைய மக்கள் பெற்றிருந்தனர். இது சீனாவின் மிக முற்கால நாள்காட்டியாகும். சியா வம்சத்தின் நாள் காட்டியின் படி ஆண்டு 12 மாதங்களாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு மாதத்தின் நட்சத்திர நிலை, காலநிலை, பொருள் நிலை அப்போது செய்ய வேண்டிய வேளாண் நிலை, அரசியல் நிலை என்பன தனித்தனியாக குறிப்பிடப்பட்டன. அப்போதைய சியா வம்சத்தின் வேளாண் உற்பத்தின் வளர்ச்சி நிலை குறிப்பிட்கஅளவில் பிரதிபலிக்கப்பட்டது. பண்டைக்கால சீனாவில் மதிப்புக்குரிய அறிவியல் அறிவு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

1 2 3 4 5 6 7 8 9 10 11
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040