• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீன வம்சகால வரலாறு]

சுயி தாங்

கி.பி.581ம் ஆண்டு முதல் சுயிவெண்டி பேரரசர் யான் சியென் சுயி வம்சத்தை நிறுவினார். கி.பி.618ம் ஆண்டு சுயி யாங்தி பேரரசர் யாங்குவாங் தூக்கியிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவர்கள் ஆட்சிபுரிந்த காலம் 37 ஆண்டுகள் மட்டுமே. சுயிவெண்டி பேரரசர் அதிகாரி முறைமை நிறுவி வடக்கு சோ வம்சத்தின் ஆறு அதிகாரிகள் அமைப்பை நீக்கி மூன்று மாநிலங்கள் மற்றும் 6 சோதனை வட்டாரங்கள் அமைப்பை உருவாக்கினார். இது அப்போதைய சமூகத்துக்கு மிக பெரிய பங்காகும். அப்போது புதிய அரசியல் சட்டம் வகுக்கப்பட்டது. தண்டனை தெற்கு வடக்கு வம்சகாலத்தில் இருந்ததை விட துன்பமானதாக இல்லை. தவிர, தேர்வு முறை நிறுவப்பட்டது. அதிகாரிகளை தேர்வு செய்து நியமிக்கும் அமைப்பு முறை உருவாக்கப்பட்டது. சுயி யான்தி பேரரசர் பெரிய காய்வாயை உருவாக்கினார். ஆனால் அவருடைய மிருகத்தனமான செயல் வரலாற்றில் கெட்ட பெயர் பெற்றது. அவருடைய தீய ஒழுக்கத்தினால் மக்களின் எதிர்ப்பு வலுவடைந்தது. கடைசியில் சுயியாந்தி பேரரசர் மக்களால் தூக்கியிடப்பட்டார். அத்துடன் சுயி வம்சம் முடிவடைந்தது.

கி.பி.618ம் ஆண்டு முதல் கி.பி.907ம் ஆண்டு வரை தாங் வம்சகாலம் நீடித்தது. அதன் ஆட்சிக் காலம் 289 ஆண்டுகளாகும். தாங் வம்சம் முற்காலம் பிற்கால என்று பிரிக்கப்பட்டது. அவை ஆன்லோசான்-ஸ்சுமின் கலவரத்தால் எல்லையாக பிரிக்கப்பட்டவை. முற்காலம் வளமிக்க காலம். பிற்காலம் பலவீழ்னமான காலம். தாங்கோச்சு தாங் வம்சத்தை நிறுவினார். தாங்தைய்சுன் லீஸ்மின் படைவீரர்களுக்கு தலைமை தாங்கி பத்து ஆண்டுகளில் ஒன்றிணைப்பு லட்சியத்தை நிறைவேற்றினார். லீஸ்மின் ஆட்சிக்கு வந்த பின் தாங் வம்சகாலத்தை சீன நிலபிரப்புத்துவ சமூகத்தில் முன்கண்டிராத வளமிக்க வம்சகாலமாக உருவாக்கினார். அரசியல் பொருளாதாரம், பண்பாடு முதலிய துறைகளில் காணபட்ட வளர்ச்சி அப்போதைய உலகில் முதல் இடம் வகித்தது. பின் தாங்சின்சுன் ஆட்சி புரிந்த போது தாங் வம்சகாலத்தில் வலிமைமிக்க நாடும் செல்வமுடைய மக்களும் நிறைந்த காட்சி காணப்பட்டது. ஆனால் தாங்சியென்சுன் ஆட்சிபுரிந்த போது ஆன்லோசான்-ஸ்சுமின் கலவரம் ஏற்பட்டது. அப்போது முதல் தாங் வம்சம் தோல்வியடையத் தொடங்கியது.

சுயி தாங் வம்சகாலத்தில் ஆட்சி முறையில் அமைப்பு விதிகள் அதிகமாக வகுக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, மூன்று மாநிலங்களும் ஆறு சோதனை வட்டாரங்களும் உடைய ஆட்சி முறைமை, தேர்தல் முறைமை, இரண்டு வகை வரி வசூலிப்பு முறைமை ஆகியவை பிற்கால தலைமுறைகளுக்கு ஆழ்ந்த தாக்கம் ஏற்படுத்தின. சுயிதாங் ஆட்சியாளர்கள் திறந்த வெளிநாட்டு கொள்கையை பின்பற்றி, உள்நாட்டு வெளிநாட்டு பொருளாதார பண்பாட்டு தொடர்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. இலக்கியத் துறையில் தாங் கவிதைத் தொகுதி மிக பெரிய சாதனையாகும். சென்ச்சுஆன், லீ பைய், துப்பு, பைச்சியுயி, லீசான்யின், துமு ஆகியோர் இவர்களில் தலைசிறந்த பிரதிநிதிகளாவர். யென்லிப்பன், வூத்தோச்சு, லீஸ்சியன், ஓங்வெய் ஆகியோரின் ஓவியங்கள் மக்களிடையில் புகழ் பெற்றுள்ளன. கற்குகை கலையும் தலைமுறை தலைமுறையாக பரவி வந்துள்ளது. அறிவியல் தொழில் நுட்பத் துறையில் சீனாவில் நான்கு கண்டுபிடிப்புகளிலான அச்சுத் தொழிலும் வெடி மருந்தும் அப்போது தான் கண்டுபிடிக்கப்பட்டன.

பிற்கால தாங் வம்சத்தில் அரசியல் துறையில் குழப்பம் ஏற்பட்டது. நியூ லிதெய் கட்சிகளிடை சண்டை சச்சரவுகள் முதல் அலிகள் எல்லா அதிகாரங்களையும் தன்னிடம் வைத்துக் கொள்வது வரை இதற்கிடையில் விவசாயிகள் அடிக்கடி கிளர்ச்சி செய்தனர். கடைசியில் குவான்சோ கிளர்ச்சி நிகழ்ந்தது. கிளர்ச்சி படைவீரர்களின் தலைவரான சுவென் தாங் வம்சத்திற்குத் துரோகம் செய்தார். பின் தாங் வம்சத்தை தோற்கடித்து தம்மைத்தாமே பேரரசராக நியமித்துக் கொண்டார். சீனாவின் வூத்தைய் வம்சங்களின் அதாவது 5 வம்சங்களின் பிற்காலலியான் வம்சத்தை நிறுவினார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040