• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீன வம்சகால வரலாறு]

சிங் வம்சம்

சிங் வம்சகாலம் கி.பி.1644ம் ஆண்டு முதல் 1911ம் ஆண்டு வரை நீடித்தது. நுர்ஹாட்ஸ் முதல் கடைசி மன்னர் வூயி வரை 12 மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். அதனுடைய ஆட்சி காலம் 268 ஆண்டுகள்.

ஒரு கோடியே 20 லட்சம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு சின் வம்சகாலத்தில் இருந்தது. 1616ம் ஆண்டில் நுர்ஹாட்ஸ் பின் கிங் நாட்டை நிறுவிய பின் 1636ம் ஆண்டில் நாட்டின் பெயரை சிங் என்று மாற்றினார். 1644ம் ஆண்டில் லீச்சுசன் விவசாயி படைகள் மின் வம்சத்தை தோற்கடித்தன. மின் வம்ச ஆட்சியின் சோசன் மன்னர் தற்கொலை செய்தார். சிங் படைகள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிப் படைகளைத் தோற்கடித்து பெய்சிங்கைத் தலைநகராக உறுதிப்படுத்தின. சிங் ராயல் அரசு பல்வேறு இடங்களில் தோன்றிய விவசாயி கிளர்ச்சியை ஒடுக்கி படிப்படியாக நாட்டை ஒருங்கிணைத்து.

வர்க்க முரண்பாடுகளைக் குறைக்கும் வகையில் சிங் ராயல் அரசு தரிசு நிலம் பண்படுத்துவதற்கு ஊக்கம் அளித்து வரியை குறைக்கும் கொள்கை அமலாக்கியது. உள் நாட்டிலும் எல்லைப் பகுதிகளிலும் அப்போது சமூக பொருளாதாரம் வளர்ச்சியடைந்தது. 18ம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் நிலபிரபுத்துவ பொருளாதாரம் புதிய உச்ச நிலையில் வளர்ச்சியடைந்தது. "கான்சியூன்ச்சன் சியென் லொங்"ஆகிய மூன்று மன்னர்களின் வலம்மிக்க ஆட்சிகாலம் என்று வரலாற்றில் பாராட்டப்பட்டது. மத்தியத்துவ ஆட்சியுரிமை அமைப்பு முறை மேலும் கடுமையாகியது. அரசு ஆற்றல் வலுபட்டது. சமூக ஒழுங்கு அமைதியானது. சிங் வம்சகாலத்தில் மக்கள் தொகை 18ம் நூற்றாண்டின் இறுதியில் 30 கோடியாக அதிகரித்தது.


1 2 3 4 5 6 7 8 9 10 11
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040