• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீன வம்சகால வரலாறு]

சீன வரலாற்றில் முதலாவது நிலப்பிரபுத்துவ வம்சம்--சிங்

ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலான அடிமை சமூகத்துக்கு பின் ஒன்றிணைந்த மத்திய அதிகாரத்துடந் சீன வரலாற்றின் முதலாவது நிலபிரபுத்துவ வம்சமான சிங் வம்சம் உருவாகியது. அதன் ததோற்றம் சீன வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

கி.மு.255ம் ஆண்டு முதல் கி.மு.222ம் ஆண்டு வரையான காலம் சீன வரலாற்றில் போரிடும் நாடுகள் காலமாகும். அக்காலத்தில் தான் சீனாவில் அடிமைச் சமூக முறை முடிவடைந்தது. அப்போது பல சிறிய சுதந்திர நாடுகள் இருந்தன. அவற்றுக்கிடையில் மோதல் ஏற்பட்டு பல அழிந்தன. இறுதியில் 7 பெரிய நாடுகள் மட்டுமே எஞ்சியன. சிங், சி, சூ,, வெய், யென், ஹான், சௌ ஆகிய நாடுகள்7 வீரர்கள் என்று அழைக்கப்பட்டன. இந்த ஏழு நாடுகளில் வட மேற்கில் உள்ள சிங் நாட்டில் ராணுவ மற்றும் வேளாண் மேற்குர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆகவே அதன் ஆற்றல் மேற்குக்கிரமாக வலிமையடைந்தது. கி.மு.247ம் ஆண்டில் சிங் வம்ச மன்னராக 13 வயதான யின்சன் பதவி ஏற்றார். 22 வயதில் அவர் ஆட்சிபுரிந்த பின் மற்ற ஆறு நாடுகளை அழித்து நாட்டை ஒன்றிணைக்கும் மகத்தான நெடுநோக்கு திட்டத்தை துவக்கினார். திறமைசாலிகளை அவர் தேடினார். எந்த நாட்டவராக இருந்தாலும் அவர் திறமைசாலி என்றால் அவர் பதவியில் நியமிக்கப்பட்டார். எடுத்துக்காட்டாக, "சன் கோ கால்வாயை" கட்டும் அதிகாரத்தை ஹான் நாட்டைச் சேர்ந்த உளவாளி சென் கோசினுக்கு அவர் கொடுத்தார்.

விளைவாக சிங் நாட்டில் 40 ஆயிரம் ஹெக்டர் வறண்ட உவர் நிலம் செமிப்பான விளை நிலமாக மாறியது. சீனாவை ஒன்றிணைப்பதற்குத் தேவையான பொருள்களை சிங் நாட்டுக்கு வழங்குவதற்கு அது உத்தரவாதம் செய்தது. கி.மு.230ம் ஆண்டு முதல் கி.மு.221ம் ஆண்டு வரையான பத்து ஆண்டுகளுக்குள் யின்சன் அடுத்தடுத்து ஹான், சௌ, வெய், யென், சு, சி ஆகிய ஆறு நாடுகளை தோற்கடித்து ஒன்றிணைப்பு லட்சியத்தை நிறைவேற்றினார். அத்துடன் சீன வரலாற்றில் பிரிவினை நிலைமை முடிவடைந்தது. ஒருங்கிணைக்கப்பட்டு, மத்திய அதிகாரம் சிங் மன்னராட்சியின் கீழ் வந்து யின்சன் சீன வரலாற்றில் முதலாவது மன்னராகினார். "ஸ்குவாண்டி" என்று அவர் அழைக்கப்பட்டார்.

சிங் நாடு சீனாவை ஒன்றிணைத்து சீன வரலாற்றில் பெரும் பங்கு ஆற்றியது. இது மிக முக்கியத்துவம் உடையது. முதலில், அரசியலில் ஸ் குவாங் நிலவாரிசு உடைமை முறையை சிங் ஒழித்தார். நாட்டை 36 நிர்வாக வட்டாரங்களை பிரித்தார். அதன் கீழ் மாவட்டங்கள் உள்ளன. மத்திய மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மன்னரால் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர். தலைமுறை தலைமுறையாக அதிகாரிகளை நியமிக்கும் முறை ஒழிக்கப்பட்டது. சிங் நாடு உருவாக்கிய நிர்வாக வட்டார அமைப்பு முறை சீனாவின் ஈராயிரம் ஆண்டுகால நிலப்பிரபுத்துவ வரலாற்றில் முடிவான அமைப்பு முறையாக செயல்பட்டது. தற்போதைய சீனாவில் உள்ள பல மாவடங்களின் பெயர்கள் அப்போது தான் நிர்ணயிக்கப்பட்டன குறிப்பிடத்தக்கது.

தவிரவும், சிங் நாடு நாட்டின் அளவீட்டு முறையை ஒருமைப்படுத்தியது. அதற்கு முன் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு அளவீட்டு ஆய்வு முறைகள் இருந்தன. பொருளாதாரத்தின் வளர்ச்சி குறைந்திருந்தது. இதற்கு ஏற்ப நாணயத்தையும் சட்டத்தையும் சிங் ஸ் குவான் ஒருக்கிணைத்தார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கினார். அதேவேளையில் மத்திய அதிகாரம் பெரிதும் வலுப்படுத்தப்பட்டது.

சிந்தனை மேலாதிக்கத்தை வலுப்படுத்தும் வகையில் அரசு தொகுத்த"சிங் வரலாறு"நூல் தவிர, மற்ற நாடுகளின் வரலாற்று நூல்களையும் கன்பீசஸ் படைப்புகளையும் தீயிட்டுக் கொளுத்துமாறு சிங் ஸ் குவான் கி.மு.213ம் ஆண்டில் கட்டளையிட்டார். இந்த மதிப்புக்குரிய படைப்புகளை தனிப்பட்ட முறையில் மறைமுகமாக சேகரித்து பிரசாரம் செய்தவரை கொன்று விடும்படி அவர் கட்டாயப்படுத்தினார். வடக்கிலுள்ள சிறுபான்மை தேசிய இந அதிகாரத்தின் ஊடுறுவலை தடுக்கும் வகையில் சிங் ஸ் குவான் முந்திய சிங், சௌ, யென் நாடுகள் கட்டியமைத்த பெருஞ் சுவரை பழுதுபார்த்து கட்டும் படி அவர் கட்டளையிட்டார். பெருஞ்சுவர் அபோது முதல் மேற்கில் பாலைவனத்திலிருந்து கிழக்கில் கடலுக்கு செல்லும் பத்தாயிரம் லீ நீளமான பெருஞ்சுவராகியது. அவருடைய கல்லறையைக் கட்ட சிங் ஸ் குவான் 7 லட்சத்துக்கும் அதிகமான உழைப்பாளர்களை அணிதிரட்டினார். இந்த கல்லறை தற்போது உலகில் புகழ் பெற்ற சிங் கல்லறையாகவும் குதிரை மற்றும் படைவீரர் உருவ சிலைகளின் காட்சியாகவும் திகழ்கின்றது.

சிங் ஸ் குவான் சீனாவை ஒன்றிணைத்து சீன வரலாற்றில் நீண்டகாலமாக நீடித்திருந்த பிரிவினை நிலைமை முடித்து கொண்டு ஹான் இனத்தை மையமாக கொண்ட பல தேசிய இனங்கள் உள்ள வலிமைமிக்க நிலப்பிரபுத்துவ பேரரசை நிறுவினார். அப்போது முதல் சீன வரவாற்றில் புதிய அத்தியாயம் ஒன்று திறக்கப்பட்டது.

1 2 3 4 5 6 7 8 9 10 11
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040