• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீன வம்சகால வரலாறு]

வெய் சின் தெற்கு வடக்கு வம்சங்கள்

வெய் சின் தெற்கு வடக்கு வம்சங்கள் கி.பி.220 முதல் 589 ஆண்டு

கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் முடிவில் கிழக்கு ஹான் ஆட்சி பலவீனமாகி வீழ்ச்சியடைந்தது. அப்பொழுது முதல் பிரிவினை காலத்தில் சிக்கியது. துவக்கத்தில் வெய், சூ, வூ ஆகிய மூன்று நாடுகள் ஆட்சிபுரியும் காலம் உருவாயிற்று. மேற்கு சின் ஆட்சியில் இந்த நிலைமை முடிவடைந்தது. ஆனால் மேற்கு சின் ஒன்றிணைப்பு கி.பி.265ம் ஆண்டு முதல் 316ம் ஆண்டு வரை நீடித்தது. பிரிவினை மீண்டும் உருவாயிற்று. மேற்கு சின் மன்னர் குடும்பம் சீனாவின் தென் பகுதியில் கிழக்கு சின் நாட்டை நிறுவியது. வடக்கில் தேசிய இனங்களிடையில் குழப்பமான போர்கள் நிகழ்ந்தன. அப்போது 16 நாடுகளின் ஆட்சிகள் நிகழ்ந்தன.

அப்போது சீனாவின் தெற்கில் பொருளாதாரம் பெரிதும் வளர்ந்தது. மேற்கு மற்றும் வடக்கு பகுதி களிலிருந்து பல்வேறு சிறுபான்மை தேசிய இன மக்கள் அடுத்தடுத்து தெற்கு நோக்கி குடிபெயர்ந்து வந்தனர். அவர்களிடையே இணைப்பும் பரிமாற்றமும் மேற்கொள்ளப்பட்டன. பண்பாட்டு துறையில் நுண் பொருள் ஆய்வு கோட்பாடு பரவியது. பௌத்த மதம், தொ மதம் ஆகிய மதங்கள் பரஸ்பரம் போட்டியிட்ட நிலைமையில் பரவி வளர்ந்தன. ஆனால் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தை ஆதரித்தனர். கலை இலக்கிய துறையில் சின் ஆன் காலத்தில் இருந்த 7 எழுத்தாளர்கள் தோ யூவான் மின் முதலியோரின் கவிதைகள் ஓங்சிச்சு முதலிய கலைஞர்கள் படைத்த நேர்த்தியான கையெழுத்துக்கள், குக்கைச்சு முதலியோர் தீட்டிய ஓவியங்கள், துங்குவான் கற்குகை உள்ளிட்ட கற்குகை கோயில் ஆகியவை வரவாற்றில் அழிக்கமுடியாத படைப்புகளாகும்.

அறிவியல் தொழில் நுட்பத் துறையில் ச்சு ஷுங் சி சுற்றுப்

பரப்பு விகிதக் கணக்கீட்டை புள்ளிக்குப் பின் 7 எழுத்துக்களை நிறுத்தினார். மையப் புள்ளி சியா"சி மின் யௌ சு"எனும் நூல் உலக வேளாண் வரலாற்றில் ஒரு மகத்தான படைப்பாக பாராட்டப்படுகின்றது.

தெற்கு வடக்கு வம்சங்கள் கி.பி.420ம் ஆண்டு முதல் கி.பி.589ம் ஆண்டு வரை நீடித்தது. வடக்கு வம்சகாலத்தில் வடக்கு வெய் ஆட்சி இருந்தது. அதிலிருந்து கிழக்கு வெய், மேற்கு வெய் ஆக பிரிக்கப்பட்டது. பின் வடக்குமேற்கு கிழக்கு வெய்யை தோற்கடித்தது. வடக்கு சோ மேற்கு வெயை தோற்கடித்தது. வடக்கு சோ வடமேற்குயை அழித்தொழித்தது. தெற்கு வம்சங்கள் தெளிவானவை. அதில் சுன், மேற்கு, லியான் சன் ஆகிய ஆட்சிகள் தெற்கு வம்சகாலத்தில் உள்ளன.

தெற்கு வடக்கு வம்சகாலத்தில் பொருளாதாரம் முக்கியமாக தெற்கில் வளர்ந்தது. சீனாவின் நடுப்பகுதியில் வாழ்ந்த மக்கள் போரைத் தவிர்க்கும் வகையில் தெற்கு நோக்கி குடிபெயர்ந்தனர். அவர்களின் பங்கினால் தெற்கில் உழைப்பாற்றல் அதிகரித்தது. முன்னேறிய உற்பத்தித் தொழில் நுட்பம் அங்குள்ள பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தியது. யான் சோ நகரைச் சுற்றியுள்ள இடங்கள் அப்போதைய தெற்கு வம்சகாலத்தில் மிக வளர்ச்சியடைந்த பொருளாதார வட்டாரமாக இருந்தன.

பண்பாட்டு துறையில் ஹன் சிந்தனையின் வளர்ச்சி குழப்பமானகாலம் ஆகியவை மக்களின் சிந்தனை விடுதலைக்கு வழங்கின. இலக்கிய சாதனைகளும் தரமுடையவை. கவிதைகள் இதில் மிக பெரிய சாதனையாகும்.

அப்போது வெளிநாட்டுத் தொடர்புகள் வளர்ச்சியடைந்தன. ஜப்பான், வட கொரியா, மத்திய ஆசியா, தென் கிழக்காசியா, ரோம் ஆகியவற்றுடன் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன.

கிழக்கு சின் அழிக்கப்பட்ட பின், தென் வட வம்சம் சீன வரலாற்றில் தென் வட பிரிவினை காலங்களில் ஒன்றாகும். அதன் உருவாக்கத்தினால் பொருளாதார வளர்ச்சி தேங்கியது. இருந்தாலும் மற்ற தேசிய இனங்கள் மத்திய பிரதேசத்தை ஆட்சிபுரிந்ததால் மஞ்சள் ஆற்று பள்ளதாக்கு பிரதேசத்தில் உருவாக்கிய தேசிய இன இணக்கம் சீனாவின் வரலாற்றில் முன்கண்டிராததாகும். இந்த நிலைமையில் தான் வடக்கில் வாழ்ந்த தேசிய இனங்கள் ஹான் இனத்தால் இணைக்கப்பட்டன. தென் வட வம்சங்களின் பிரிவினை தேசிய இன ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்கு மிகவும் முக்கிய பங்கு ஆற்றியது. இது சீன தேசத்தின் வளர்ச்சியில் இன்றியமையாத ஒரு முக்கிய தொடராகும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040