• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீன வம்சகால வரலாறு]

எழுத்துக்களில் பதிவேடு செய்யப்பட்ட மிக பண்டைய மன்னராட்சி..........சான்

சீனாவின் கல்வியியல் வட்டாரத்தில் சியா வம்சகாலம் சீனாவின் பண்டைகாலத்தில் மிக முற்கால மன்னராட்சியாக கருதப்படுகின்றது. ஆனால் அது பற்றிய வரலாற்று பதிவேடுகள் இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்களின் அபடிப்படையில் கற்பனையாக உருவாக்கப்பட்டது. தொல் பொருளால் உறுதிப்படுத்தப்பட்ட சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. சீனாவின் பண்டைகாலத்தில் தொல் பொருளால் உறுதிப்படுத்தப்பட்ட மன்னராட்சி சான் ஆட்சி ஆகும். இது பற்றி தொடர்ச்சியாக படியுங்கள்.

சான் வம்சம் கி.மு.16ம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. கி.மு.11ம் நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்தது. அதன் ஆட்சிகாலம் சுமார் 600 ஆண்டுகளாகும். துவக்க காலத்தில் அதன் தலைநகர் பல முறை இடம் பெயர்ந்தது. கடைசியில் யின் எனும் இடத்துக்கு குடியேறியது. யின் எனும் இடம் இப்போதைய சீனாவின் ஹொநான் மாநிலத்தின் ஆன் யானுக்கு அருகில் உள்ள இடத்தில் இருந்தது. சான் வம்சகாலத்தின் துவக்கத்தில் சீனாவின் நாகரிகம் கணிசமான அளவு உயர் நிலையில் வளர்ந்திருந்தது. ஆமை ஓட்டில் செதுக்கப்பட்ட சாசனம், வெண்கல பண்பாடு என்பன அதன் முக்கிய தனிச்சிறப்பாகும்.

ஆமை ஓட்டில் செதுக்கப்பட்ட சாசனம் என்றால் ஆமை எலும்பில் செதுக்கப்பட்ட பண்பாடு என்பதாகும். 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் சீனாவின் ஹொநான் மாநிலத்தின் ஆன் யானின் வட மேற்கிலுள்ள சியாவ் தென் எனும் கிராமத்தில் வாழ்ந்த விவசாயிகள் தற்செயலாக பொறுக்கியெடுத்த ஆமை, மிருகங்கள் ஆகியவற்றின் எலும்பை திரட்டி மூலிகை மருந்தாக விற்பனை செய்தனர். எலும்பில் செதுக்கப்பட்ட சொற்களை ஓர் அறிஞர் கண்டறிந்தார். பின் அந்தச் சொற்களின் பொருள் அறிய அவர் மாபெரும் முயற்சி செய்தார். சற்றுகாலத்துக்கு பின் சீனாவின் பண்டைய எழுத்துக்கள் ஆராயும் அறிஞர்கள் இந்த ஆமை உள்ளிட்ட மிருக ஓட்டில் செதுக்கப்பட்ட எழுத்துக்கள் சான் வம்சகாலத்தில் பயன்படுத்த எழுத்துக்களாகும் என்பதை உறுதிப்படுத்தினர். இதன் மூலம் சியான் தென் கிராமம் பண்டைய நூலில் குறிபிட்ட சான் வம்சகாலத்தின் தலைநகரான யின்னின் சிதிலம் என்று கண்டறியப்பட்டது.

யின் மரபுச் சிதிலம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, 20ம் நூற்றாண்டில் சீனா தொல் பொருள் ஆய்வின் மிக முக்கிய கண்டுபிடிப்பாகும். 1928ம் ஆண்டில் முதன் முதலில் ஆமை ஓட்டில் செதுக்கப்பட்ட சாசனம் வெண்கல பொருட்கள் உள்ளிட்ட மதிப்புமிக்க தொல் பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டன. ஆமை ஓட்டில் செதுக்கப்பட்ட சாசனம் என்றால் ஆமை ஓட்டில் செதுக்கப்பட்ட பண்டைய எழுத்துக்களாகும். சான் வம்சகாலத்தில் மன்னர் எந்த வேலை செய்வதற்கு முன் ஜோசியம் சொல்ல வேண்டும். ஆமை ஓடு ஜோசியம் சொல்லும் போது பயன்படுத்தப்பட்ட கருவியாகும். இதை பயன்படுத்துவதற்கு முன் பதப்படுத்த வேண்டும். முதலில் ஆமை எலும்பில் ஒட்டியிருக்கும் ரத்தமும் இறைச்சியும் சுத்தமாக அழிக்கப்பட வேண்டும். பின் ஆமை ஓடிலுள்ளே அல்லது எலும்பின் எதிர் புறப் பகுதி கத்தியினால் துளைக்க வேண்டும். ஜோசியம் சொல்பவர் அவருடைய பெயர் கேட்கப்படும் தேதி, வினாக்கள் ஆகியவை ஓட்டில் செதுக்க வேண்டும். ஓட்டை தீயில் வாட்ட வேண்டும். "சௌ"எனும் சகுனம் தோன்றினால் ஜோசியம் சொல்பவர் அதை பகுத்தாராய்ந்து முடிவு செய்ய வேண்டும். இமுடிவை ஓட்டில் செதுக்க வேண்டும். இத்தகைய ஓடும் அதிகார வட்டாரத்தால் பதிவேடாக பாதுகாக்கப்பட வேண்டும்.

தற்போது யின் சிதிலத்தில் மொத்தமாக ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஓட்டுத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் 4000 எழுத்துக்கள் உள்ளன. 3000 எழுத்துக்களை அறிஞர்கள் ஆராய்ந்தனர். 1000 எழுத்துக்கள் கருத்தொற்றுமை யின்றி விளக்கம் செய்யப்பட்டன. இந்த ஆயிரம் எழுத்துகளின் மூலம் சான் வம்சகாலத்தின் அரசியல் பொருளாதாரம் பண்பாடு முதலிய துறைகளின் நிலைமையைச் சற்றே அறிந்து கொள்ள முடிந்தது. இது பற்றிய நூல் 1913ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அதன் பெயர் "தியெயூன் சான் குவெய்"என்பதாகும். சீனாவில் புகழ் பெற்ற வரலாறு ஆசிரியரும் இலக்கிய ஞானியுமான கோ மு ழோ 1929ம் ஆண்டில் வெளியிட்ட"ஆமை ஓட்டில் செதுக்கப்பட்ட சாசனம் பற்றிய ஆய்வு"எனும் நூல் இன்னொரு முக்கிய நூலாகும். பீக்கிங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சியு சி குவெய், சீன வரலாற்று ஆய்வகத்தின் பேராசிரியர் லீ சியெ சின் ஆகியோர் இந்த துறையில் செல்வாக்கு பெற்றுள்ளனர்.

சான் வம்சகாலத்தில் அரசு நிறுவப்பட்டது. தனியார் உடைமை முறைமையும் அடிப்படையில் நிறுவப்பட்டது. அப்போது முதல் சீன வரலாறு நாகரிக யுகத்தில் நுழைந்ததை தொல் பொருள் கண்டுபிடிப்பு மற்றும் கல்வியல் ஆராய்ச்சி உறுதிப்படுத்துகின்றது.

1 2 3 4 5 6 7 8 9 10 11
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040