• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீன வம்சகால வரலாறு]

ஹான்

கி.மு.206ம் ஆண்டு முதல் கி.பி.8ம் ஆண்டு வரையான காலம் சீன வரலாற்றில் மேற்கு ஹான் காலமாகும். ஹான் கோ டி மன்னரான லியுப்பான் ஹான் வம்சத்தை உருவாக்கி சான் அன்னை தலைநகராக ஆக்கினார்.

அவர் ஆட்சிபுரிந்த 7 ஆண்டுகளில் மத்திய அதிகாரம் வலுப்படுத்தப்பட்டது. மக்களுக்கு நன்மை தரும் பல அரசியல் கொள்கைகளை வகுத்து தமது ஆட்சியை உறுதிப்படுத்தினார். கி.மு.159ம் ஆண்டில் கோச்சு மரணமடைந்த பின் குவெய் மன்னராக பதவி ஏற்றார். ஆனால் அப்போதைய அதிகாரம் ஹான்கோட்டியின் மனைவியான ராணி லயூச்சின் கையில் சேர்ந்தது. ராணி லயூ 16 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவர் சீன வரலாற்றில் மிக அரிதான பெண் ஆட்சியாளர்களில் ஒருவராவார். கி.மு.183ம் ஆண்டு வெண்டி மன்னராக பதவி ஏற்றார். அவரும் அவரின் மகனான சுச்சின் மன்னரும் மக்களுக்கு நன்மை தரும் கொள்கைகளில் உறுதியாக நின்று மக்களின் மீது திணித்த வரியை குறைத்தனர். இதனால் ஹான் பேரரசின் பொருளாதாரம் விறுவிறுப்பாக வளர்ந்தது. வரவாற்று ஆசிரியர்கள் இந்த காலத்தை "வென்சிங் ஆட்சி"காலமாக பாராட்டினர்.

ச்சௌ மற்றும் சியுவான் ஆகிய மன்னர்கள் ஆட்சிபுரிந்த 38 ஆண்டுகளில் மக்களுக்கு நன்மை தரும் கொள்கை நடைமுறைபடுத்தப்பட்டது. சேற்கு ஹான் நாட்டின் ஆற்றல் வலுபட்டுள்ளது. அதேவேளையில் ஊள்ளூரின் சக்திகள் வலுவடைந்ததால் ஹான் பேரரசின் ஆட்சி கடுமையாக பாதிக்கப்பட்டது. கி.பி.8ம் ஆண்டில் வுவான் மான் மன்னர் பதவியை கைபற்றி நாட்டின் பெயரை சின்னாக மாற்றினார். அதனுடன் மேற்கு ஹான் சீனாவை ஆட்சிபுரியும் காலம் முடிவடைந்தது.

மேற்கு ஹான் வம்சம் சீன வரலாற்றில் ஒப்பிட்டளவில் வலிமைமிக்க பேரரசுகளில் ஒன்றாகும். மக்களுக்கு நன்மை தரும் கொள்கை இடையில் ஆட்சிபுரிந்த மன்னர்கள் பின்பற்றினர். மக்கள் உடைக்கும் உணவுக்கும் கவலைப்படமல் செழுமையாக வாழ்ந்தனர். ஹான் வம்சத்தின் அரசியல் உறுதியடைந்தது. வூதி மன்னர் அமைச்சர் தொங் ச்சொன் சூ முன்வைத்த கொன்பியூசியஸ் தத்துவத்தை மட்டும் பின்பற்றுவதென்ற யோசனையை ஏற்றுக் கொண்டார். அப்போது முதல்கொன்பியூசியஸ் தத்துவம் உருவாயிற்று. இந்த தத்துவம் சீன மன்னர்கள் ஆட்சிபுரிந்த போது கடைபிடித்த நாட்டை நடத்தும் கொள்கையாக விளங்கியது.

அரசியலும் பொருளாதாரமும் உறுதியடைந்ததால் கைவினைத் தொழில், வணிகம், சமூகவியல் கலை இயற்கை அறிவியல் ஆகிய துறைகள் பெரிதும் முன்னேற்றம் அடைந்தன. அறிவியல் தொழில் நுட்பம் உயர்ந்ததுடன், உலோகம், துணி ஆகியவற்றை முக்கியமாக கொண்ட மேற்கு ஹான் கைவினைத் தொழிலின் பயன்பாடு அதிகரித்தது. இதன் வளர்ச்சி மூலம் வணிகத் துறை செழுமையாகியானது. பட்டுத் துணிப் பாதை மூலம் மேற்கு ஆசியாவில் உள்ள பல்வேறு நாடுகளுடன் தூதாண்மை மற்றும் வணிகத் தொடர்புகள் திறக்கப்பட்டன.

கி.பி.25ம் ஆண்டு முதல் கி.பி.220ம் ஆண்டு வரையான காலத்தில் ஹென்குவாங் வூ மன்னர் லியூ சியு கிழக்கு ஹான் மன்னராட்சியை நிறுவினார்.

கி.பி.25ம் ஆண்டு லியு சியூ லியூலின் எனும் படையின் உதவியுடன் ஆட்சியை கைபற்றிய ஓங் மானைத் தோற்கடித்து மன்னராக பதவி ஏற்றார். ஹான் நாட்டை நிறுவினார். லொயானை தலைநகராக நிர்ணயித்தார். இரண்டாவது ஆண்டில் குவான்யூ மன்னர் லியு சியு ஓங் மான் நடைமுறைபடுத்திய பழைய கொள்கையை மேற்குர்திருத்தி ஆட்சி முறையை சரிபடுத்த கட்டளை பிறப்பித்தார். நாட்டின் விவகாரங்களை கையாள 6 அமைச்சர்களை அவர் நியமித்தார். அதிகாரிகள் அமைமைகளைக் கொண்டிருக்கும் முறைமையை நீக்கினார். நிலத்தை சரிபார்த்தார். இதன் விளைவாக மக்களின் வாழ்க்கை படிபடியாக அமைதியாகியது. கி.பி.முதலாம் நூற்றாண்டின் நடுபகுதியில் குவான் மன்னர், மின் மன்னர், சான் மன்னர் ஆகியோரின் நிர்வாகத்துக்குப் பின், கிழக்கு ஹான் வம்சம் முந்திய ஹான் வம்சத்தின் செழுமையை மீட்டது. அந்த காலம் மக்களால் மறுமலர்ச்சி காலமாக பாராட்டப்பட்டது.

கிழக்கு ஹான் வம்சத்திந் முற்காலத்தில் அரசியல் அதிகாரம் மேலும் வலுபட்டு உள்ளூர் அதிகாரத்துடன் இணைந்ததால் நாட்டின் நிலைமை நிதானமானது. பொருளாதாரம், பண்பாடு, அறிவியல் தொழில் நுட்பம் முதலிய துறைகளின் தரம்மேற்கு ஹான் தரத்தைத் தாண்டியது. கி.பி.105ம் ஆண்டில் சைலன் தாள் தயாரிப்பு தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்கவே சீனாவில் மூங்கில் பலகையில் எழுத்துக்கள் செதுக்கப்பட்ட காலம் முடிவடைந்தது. தாள் தயாரிப்பு நுட்பம் சீனாவின் பண்டைர்காலத்திய 4 கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இப்போது அங்கீகரிக்கப்படுகின்றது. இயற்கை அறிவியல் துறையில் சான் ஹன்னை பிரதிநிதியாகக் கொண்ட கிழக்கு ஹான் கல்வியியல் வட்டாரத்தில் மதிப்பு பெற்றது. வானியல் புவி உருண்டை, பூகோளம் கண்காணிப்பு கருவி போன்ற அறிவியல் கருவிகளை சாங் ஹன் உருவாக்கினார். தவிரவும் கிழக்கு ஹான் வம்சத்தின் பிற்காலத்தில் புகழ் பெற்ற சீன மூலகை மருத்துவர் குவா தோ மயமக்க மருந்து நுட்பத்தை பயன்படுத்தி நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை அளித்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040